இமாச்சல பிரதேசத்தின் 14-வது முதல்வராக பாஜக.,வின் ஜெய்ராம் தாக்குர் பதவியேற்றுக் கொண்டார்.

இமாச்சல பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த நவம்பர் 9-ம் தேதி தேர்தல்நடைபெற்றது. 68 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில், 44 இடங்களில் பாஜக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியைக்கைபற்றியது.

இதைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் புதன் கிழமை புதிய அரசு பதவியேற்று கொண்டது. தலைநகர் சிம்லாவில் நடைபெற்ற பதவியேற்புவிழாவில் புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்குர் பதவியேற்று கொண்டார். அவருக்கு, ஆளுநர் ஆச்சார்யாதேவ்,   பதவியேற்பு பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரை தொடர்ந்து 10 பேர் மாநில அமைச்சர்களாக பொறுப் பேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.

இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தைசேர்ந்த ஜெய்ராம் தாக்குர், 5-வது முறையாக அம்மாநில சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவரது மனைவி, டாக்டர் சாதனா தாக்குர், கர்நாடகாவின் ஷிவமொகா (ஷிமோகா) மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

Leave a Reply