இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியைவிட பாஜக பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்ட சபைக்கு கடந்த மாதம் 9-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 75.28 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 42 மையங் களில் பதிவான வாக்குகள் எண்ணும்பணி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலைபெற்றது. ஆளும் காங்கிரஸ் கட்சியானது பின்னடவை சந்தித்தது. ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களில் பாஜக சுமார் 44 இடங்களில் முன்னிலைபெற்றுள்ளது.

இதனால், ஆளும் காங்கிரசை வீழ்த்தி பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகி யுள்ளது.

Leave a Reply