ஹரியானா மாநிலத்தில் மனோகர்லால் முதலமைச்சராக தொடர்வார் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிப்பது என்பது சுலபமானகாரியம் கிடையாது. அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்கள் புதியஉயரத்தை அடையும். ஹரியானா மாநிலத்தில் மனோகர்லால் முதலமைச்சராக தொடர்வார்’ என்று அறிவித்துள்ளார்.

மேலும், தீபாவளி பண்டிகைக்கு மஹாராஷ்டிரா, ஹரியானா மக்கள் பரிசளித்துள்ளனர். அவர்களுக்கு மன மார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாஜக அரசின் 5 வருட உழைப்பிற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது’ என்று  பிரதமர் நரேந்திர மோடி  கூறியுள்ளார்.

முன்னதாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘மோடியின் 1.0வை விட மோடி 2.0 மிகவேகமாக செயல்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் கடந்த தேர்தலைவிட இந்த முறை பாஜகவின் வாக்கு வங்கி 3% உயர்ந்துள்ளது’ என்று பேசினார்.

Comments are closed.