திருப்பூர் மற்றும்  மாணவியின்  தற்கொலைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இதை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின் அவர்களே

எஸ்ஆர்எம் கல்லூரியில் நான்கு பேர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள் ஆகையால் இந்த கல்லூரியை இழுத்து மூடிவிடலாமா ஸ்டாலின் அவர்களே

பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வந்தால் சில பேர் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதால் கோழைத்தனமாக முடிவெடுப்பார்கள் ஆகையால் இனிமேல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுவேண்டாம் என்று முடிவெடுத்து விடலாமா ஸ்டாலின் அவர்களே

தினசரி சாலையில் விபத்து ஏற்படுகிறது ஆனால் சாலையில் யாருமே பயணம் செய்யவேண்டாம் என்று சட்டம் இயற்றலாமா ஸ்டாலின் அவர்களே

பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு ஓட்டுவங்கி அரசியலுக்காக இம்மாதிரி இறந்தவர்களுடைய இழப்பை பயன்படுத்திய அரசியல் செய்யும் இழிநிலையை நிறுத்திக் கொள்ள வேண்டுமாய் திரு ஸ்டாலின் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Comments are closed.