*இறந்தவர்களை அடக்கம் செய்ய ஆதார் கொடுப்பது எளிதா?*

*இல்லை சாவு வீட்டில் அலைந்து திரிந்து அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து இறப்பு சான்றிதழ் வாங்கி வந்து அடக்கம் செய்வது எளிதா?*

*சுடுகாட்டில் பிணத்தை எரிக்கவேண்டுமென்றால் ஆதார் அட்டை கேட்கிறார்கள் என்று கடுப்பாகிறார்களே ஏன்?*

*பிணத்தை மாற்றி கட்டி, மருத்துவர் சான்றிதழை போலியாக காட்டி எரிக்கப்பட்ட குற்றங்களை தடுக்க  என்ன செய்வீர்கள்?*

*இறந்தவர்களை அடக்கம் செய்ய ஆதார் ஐடி கேட்கிறார்கள் என்று கொக்கரிப்பு எதற்கு?*

*இதுவரை, இப்போதும், இன்றும், இறப்பு சான்றிதழ் காட்டி தானே வருகிறார்கள்.*

*அதில் போலி சான்றிதழ் வாங்கி விடுவார்கள் என்று தான் இப்போது ஆதார் ஐடி கேட்கிறார்கள் அவ்வளவு தான் இது ஒரு சின்ன மாற்றம் தான்.* 

*இறப்பு சான்றிதழ் வாங்க சாவு வீட்டில் அதிகாரிகளை பார்த்து அலைந்து திரிந்து லஞ்சம் கொடுத்து வாங்கி வந்து சுடுகாட்டிற்கு கொண்டு போவதை விட ஆதார் கார்டு இயற்கனவே எடுத்து வைத்து உள்ள கார்டை காட்டுவது எளிது இல்லையா?*

*சாவதற்கு என்று தனியாக ஆதார் கார்டு மோடி எடுக்க சொல்லவில்லை. நாமே எடுத்து இதுவரை பயன்படுத்தி வரும் ஆதார் கார்டு தான்.* 

*இந்த நாட்டில் எவ்வளவு ஊழல் நடக்கிறது அதை எல்லாம் ஒரு சிஸ்டத்தின் ஒழுங்கு படுத்தும் மோடி அவர்களின் முயற்சிகளை கொச்சைப்படுத்தாதீர்கள்*

*இன்றும் மிகப்பெரிய ஊழல்களில் இறந்தவர்கள் பெயரில் கணக்கு காட்டி இன்று பல இடங்களில் நிவாரணம் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் தில்லுமுல்லுகளை கோடானகோடி ஊழல் செய்கிறார்கள் என்பதால் தான்  எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள் இதில் என்ன தவறு கண்டீர்கள்?*

*இதையே அமெரிக்காவில் செய்யும் போது , சிங்கப்பூரில் செய்யும் போது சவுதி அரேபியாவில் செய்யும் போது வெளிநாட்டை பாருயா எல்லாத்துக்கும் ஒரு சிஸ்டம் வெச்சிருக்கான் என்று பாராட்டுனீர்களே.*

*ஒரு சிஸ்டத்துக்கு அடங்க மாட்டேன் என்றால் ஆடைகள் அணிவது, கழிப்பறையில் கழிவது, இடதுபுறமாக வாகனத்தை ஓட்டுவது எல்லாமே சிஸ்டம்தான். அதை மீறுங்களேன் முடியுமாம்?*

*வெளிநாட்டில் அடையாள அட்டை இல்லாமல் வாழவே முடியாது. வீட்டை விட்டு வெளிய வந்தால் அடையாள அட்டை இருக்க வேண்டும் இல்லை என்றால் ஜெயில் தான்,*

*இதையெல்லாம் வெளிநாட்டில் வேலைக்கு போன நண்பர்களிடம் கேளுங்கள்..*. 

*நம்நாட்டில் பிரதமர் மோடி அவர்களின் முயற்சிகளை சீரழித்திட அவரின் அரசியல் எதிரிகள் போடும் பதிவுகளை கண்டித்து பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு பகிர்ந்து கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள் தனமாக உள்ளது?* 

*சும்மா எதற்கு எடுத்தாலும் குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரி எந்த தீவிரவாதியாவது எந்த பதிவையாவது தயார் செய்து மோடியை குறை சொல்வான் அதை எல்லாம் பெரிதாக நாட்டிற்கு சேவை செய்வது போல நீங்கள் பகிர்ந்து கொண்டு இருக்கீங்களே! யோசித்து பாருங்கள் ?*

*சோஷியல் செக்யூரிட்டி அட்டை போல ஆதார் உள்ளது.*

*இன்று 100 கோடி பேர் கைரேகை அரசின் கையில். ஏதோ ஒரு குற்றத்தில் ஒரு தடயம் கிடைத்தால் போதும்.*

*அதுதான் எல்லா பயலுகலும் அரண்டு போய் இப்படி சோசியல் மீடியாக்களில் விசத்தை பரப்பி வரான்ஙக.*

*இவன்கள் பதிவை பகிர்ந்து உளவு துறை கண்காணிப்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.*

*குருப் அட்மிகள் எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை*

Leave a Reply