தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல்வெளியிட்டார். 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்துவதுபோல் காட்சிகள் உள்ளன.

 

இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது  இறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதியற்ற சூழலை ஏற்படுத்துகின்றனர் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

‘‘இந்த வீடியோ காட்சியை ஒரு மருத்துவர் என்ற முறையிலும், அரசியல் கட்சித்தலைவர் என்ற முறையிலும் கவனிக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்தன. அப்போதெல்லாம் இதனை வெளியிடவில்லை. இவ்வளவு நாள்கழித்து இதனை ஏன் வெளியிடுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இது, பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது முக்கியமல்ல. அதேசமயம் தேர்தல்சமயத்தில் இதை வெளியிடுவது ஏன் என்பதுதான் கேள்வி’’ எனக்கூறியுள்ளார்.

Leave a Reply