இறைச்சியை சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

‘இறைச்சிகொல்கிறது’ என்ற தலைப்பில் மயாங்க் ஜெயின் என்பவர் தயாரித்துள்ள குறும்படம் டெல்லியில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. இந்தவிழாவில் மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து நடந்தசெய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், இறைச்சி சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உடல் சைவ உணவை மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடியது. இந்த இயற்கை விதியைமீறி நாம் இறைச்சி சாப்பிட்டால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

நாள்தோறும் இறைச்சி சாப்பிட்டால் உங்கள் உடல் பல வீனமாகிவிடும். இறைச்சி சாப்பிடுவதால் உங்களுக்கு உடனடியாக மரணம்நேரிடாது. ஆனால் அது உங்கள் உடலை மிகவும் பலவீனப்படுத்திவிடும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், முதலில் நீங்கள் இறைச்சியை சாப்பிடுகிறீர்கள். பிறகு இறைச்சி உங்களை சாப்பிடத் தொடங்கிவிடும். மருத்துவக் கல்வியில் ஒவ்வொரு மாணவரும் 5 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உணவியல் குறித்து சிலமணி நேரங்கள் மட்டுமே பாடம் நடத்தப்படுகிறது. மருத்துவக் கல்வியில் உணவியலும் ஒருமுக்கிய பாடம். அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply