இலங்கையில் நடைபெற்ற உச்சக்கட்டபோருக்கு பின்னர் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தர  அரசு முன்வந்தது.

இவற்றில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை 46 ஆயிரம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப் பட்டன.

பின்னர்  வரும் 2020-ம் ஆண்டுக்குள்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு 55 ஆயிரம் விடுகளை கட்டித்தரும் செயல் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது.

இதுதவிர, உவா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு  இந்திய மற்றும் இலங்கை அரசின் உதவியுடன் 4 ஆயிரம்வீடுகள் கட்டித் தரவும் முடிவு செய்யப்பட்டது.
 

இருநாட்டு அரசுகள் சார்பில் பயனாளிகளுக்கு தவணைமுறையில் 9 லட்சத்து 50 ஆயிரம் (இலங்கை) ரூபாய் பணம் தந்து இந்த வீட்டுதிட்டத்தை நிறைவேற்றப்படுகிறது.

இவ்வகையில், உவா மாகாணத்துக்கு உட்பட்ட துன்சிநானே, நுவரெலியா பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்ட 400 வீடுகளை பயனாளிகளுக்கு முதல் தவணையாக வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

டெல்லியில் இருந்து காணொலி (வீடியோ கான்பிரன்சிங்) வழியாக பிரதமர் நரேந்திரமோடி பயனாளிகளுக்கு இந்த வீடுகளை ஒப்படைத்து உரையாற்றினார்.

Leave a Reply