பயங்கரவாதிகளை எதிர்கொள்வது குண்டுவெடிப்பு நேரங்களில் கையாள்வதில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களும் என்.எஸ்.ஜி., , எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் ( கறுப்பு பூனை படை ) சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக 253 பேர் கொல்லப்பட்டனர். இன்னும் அங்கு சூழல் சரியாகவில்லை.

கிழக்கு இலங்கையின் கல்முனை பகுதியில் பதுங்கிஇருந்த பயங்கரவாதிகள் மீது நடந்த தாக்குதலின்போது 15 பேர் கொல்லப்பட்டனர்.இதனையடுத்து ஏப்.26 ம்தேதி இலங்கை அரசிடமி ருந்து இந்திய அரசுக்கு வேண்டுகோள் வந்துள்ளது. இது முறைப்படி வந்ததும் நமது என்.எஸ்.ஜி., படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படலாம். இதற்கென சென்னையில் முகாமில் 100 வீரர்கள் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

ஏற்கனவே இலங்கையில் குண்டு வெடிக்கும் என இந்தியா இலங்கையை எச்சரித்திருந்தது. இதனை இலங்கை உஷாராக எடுத்து கொள்ளவில்லை.

மேலும் இலங்கையில், இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் ‘ ரா ‘ உயர் அதிகாரிகள் கொழும்புவில் முகாமிட்டு. இலங்கை அதிகாரிகளுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply