இன்று இந்திய பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்திய உதவி யுடன் இலங்கையில் தமிழர்கள் வாழும் யாழ்ப் பாணத்தி ல் கட்டபட்ட துரையப்பா விளையாட்ட ரங்கி னை திறந்து வைத்தார்.துவங்கிய அன்றே இந்தியர் களின் சொத்தானயோகாவை உலக சமுதாயமே ஒருங் கிணைந்து கொண் டாடும் யோகா தினத்தின் முன்னோட் ட பயிற்சிகள் இந்தவிளையாட் டரங்கினில் துவங்கின.

சென்ற வருடம் யாழ்ப்பாணம் சென்ற மோடி அங்குள்ள தமிழர்களுக்கு நல்வாழ்வினை அளி க்கு ம் வகையினி ல் இந்திய அரசின் உதவியுடன் கட்டபட்ட 27,000 வீடுக ளை போரினால் பாதிக்க பட்டு வீடுகளை இழந்த தமிழ் குடும்ப ங்களுக்குவழங்கி அவர்களின் வாழ்வில் ஒளி யேற்றினார். அடுத்தக்கட்டமாக 45,000 வீடுகள் கட்ட பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல் இலங்கையில் தமிழர் பகுதியினில் இந்திய அரசு நிறைய உள்கட்ட மைப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது.

இராமாயாணம் காலம் தொட்டே இந்தியாவுக்கும் இலங் கைக்கும் உள்ள .இனம் சார்ந்த மதம் சார்ந்த உறவுகள் தொடர்ந்தே வருகின்றது என்பதை வரலாறு சொல்லிக் கொண்டேயிருக்கிறது.இந்த தொடர்புகளைஇடையில்
வந்தவர்களால் பிரித்து விட முடியாது என்பதும் நாம் காலம் காலமாக கண்டு கொண்டிருக்கும் உண்மை.

இலங்கையில் உள்ள தமிழர்கள் தமிழகத்தின் பெரும் பான்மை இனமான தமிழர்களின் தொப்புள் கொடி உற வுகள் என்று வரலாறுகள் எடுத்து வைத்தாலும் அதே தமிழர்கள்இந்தியாவின் பெரும்பான்மை மதமான இந்து மதத்தைஇலங்கையில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதுவரலாற்று உண்மை.இலங்கையில் மட்டு மல்ல தமிழர்கள் எங்கெல்லாம் பிழைக்க சென்றானோ அங்கெல்லாம் தன்னுடைய சமயத்தை பரப்பினான் என்று உலகமெங்கும்வியாபித்து இருக்கும் இந்து கோயி ல்கள் தமிழர்களின் மத வழிபாட்டினை உணர்த்து கிறது

இராமாயணம் காலம் தொட்டே இலங்கையில் சிவ வழி பாடு சிறந்து விளங்கியதை இலங்கையில் இன்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வீற்ற்ருக்கும் பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படும் சிவாலய ங்க ளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான தொண்டீஸ்வரம் மட்டும் தற்பொழுது விஸ்ணு கோயிலாக உள்ளது.மற்ற நான்கு ஈஸ்வரங் களானதிருக்கேதீஸ்வரம் – (மன்னார்)திருக்கோணேஸ் வரம் – (திருகோணமலை) முன்னேஸ்வரம் – (புத்தளம்) நகுலேஸ்வரம் – (யாழ்ப்பாணம்) என்று திசைக்கொன் றாக அமைந்துள்ள கோயில்கள் இலங்கை யில் இந்து மதம் தழைத்து சிறந்து இருந்ததை அறிந்து கொள்ள லாம்.

ஓடிசாவில் இருந்து புத்தமதம் இலங்கையில் விஜயன் மூலமாக பரவும் முன்பே அங்கே இருந்தது இந்துமதம்
மட்டுமே என்பதை இராமாயணம்.ஸ்கந்தபுராணம் ஆகியவற்றில் இருந்தும் அதுமட்டுமல்லாமல் சிங்கள ர்களின் நூலானா மஹாவம்சத்தின் மூலமாக தமிழர் களேஇலங்கையின் பூர்வீக குடியாளிகள் என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி வரலாற்று ரீதியாக இலங்கையை தங்களின் கட் டுப்பாட்டுக்குள் வைத்ததிருந்த தமிழர்கள் இலங்கை
சுதந்திரம் அடைந்த பிறகே தங்களின் வலிமையை இழ க்கஆரம்பித்தார்கள்.இலங்கை சுதந்திரம் அடைவத ற்கு
முன்பே இன ரீதியாக தமிழர்களுக்கும் சிங்களர்களுக் கும்மோதல்கள் இருந்து வந்தாலும் அன்று பிரிட்டிஸ் காலனிஆதிக்கத்தில் தமிழர்களின் கையே ஓங்கியிரு ந்தது. தமி ழர்களே அரசு வேலைகளில் இருந்தார்கள் தமிழர்களே உயர்கல்வி கற்றார்கள்.தமிழர்களே பிரிட்டி ஸ்அரசின் எடுபிடிகளாக இலங்கையை வழிநடத்தி சென்றார்கள்.

இதனால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பாலஸ்தீனம் இஸ்ரேல் பிரிவினை என்று இன ரீதியாக நாடுகளை
பிரித்த பிரிட்டிஸ் அரசாங்கம் இலங்கையையும் இரண் டாக பிரிக்க எண்ணிய பொழுது தமிழர்கள் அப்பொழுது விரும்பவில்லை என்பதே வரலாற்று உண்மை. ஏனென் றால் அன்று கொழும்பினை தங்கள் கைக்குள் வைத்துக்
கொண்டு செல்வ செழிப்பாக வாழ்ந்த தமிழர்கள் அதை இழந்து தமிழர்களின் பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து செல்ல விரும்ப வில்லை.இப்படி தங்களின் சுயநலம் பார்த்த சில தமிழர்களால் தான் இன்று இலங்கை தமிழர்களின் இரண்டு தலைமுறைகள் நாடு கடந்து புலம் பெயர்ந்து வாழ்கின்றன.

1948 ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் இலங்கை சுதந்திரம் அடையும் பொழுது இருந்த மக்கள் தொகையினில்
தமிழர்கள் 35% ஆக இருந்ததினால் பெரும்பான்மை சமுதாயமான சிங்களர்களின் கட்டுப் பாட்டில் இலங்கை ஆட்சி சென்றது.இன்றைக்கும் தமிழகத்தில் பிராமணர் கள் மீது நம்மை அடக்கியாண்ட சமுதா யம் என்று திராவிட கூட்டத்தினால் திட்டமிட்டு பரப்பபட்டு வந்த பிராச்சாரம் போலவே இலங்கையில் சிங்களர்கள் தமிழர்கள் மீதுபரப்பினார்கள்.

ஏனேன்றால் இலங்கை தமிழர்களும் இந்தியாவில் பிராம ணர்களைப் போல தங்களின்அறிவினால் வெள் ளைக்கார அரசில் உயர்பதவிகளில்இருந்தார்கள். எப்படி பிராமணர்கள் இன துவேசத்தின் மூலமாக இங்கே
ஆரியர் திராவிட யுத்தம் என்று திராவிட திருடர்களால் அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டார்களோ அதே மாதிரி
இலங்கையில் சிங்கள தமிழர் யுத்தம் இலங்கையின் முதல் பிரதமர் சேனநாயக்காவினால் ஆரம்பிக்கபட்டு
பண்டாரநாயக்காவினால் தொடரப்பட்டு ஸ்ரீமாவோவினால் ஊதப்பட்டு வில்லியம் கொபல்லாவ,ஜெயவர்த் தனே,பிரேமதாசா,சந்திரிக்கா குமாரதுங்கா போன்றவர்க ளால் தொடரப்பட்டு ராஜபக்சேவினால் முடிக்கப்பட்டு
தமிழர்கள் ஒடுக்கபட்டார்கள்.

இங்கே நாம் இனரீதியாக எப்படி பிராமணர்களை ஒடுக்க நினைத்தோமோ அதே மாதிரி சிங்களர்கள் தமிழர்களை
ஒடுக்கநினைத்தார்கள்..என்ன பிராமணர்கள் புத்திசாலி கள்..துஷ்டனைக்கண்டால் தூர விலகு என்று விலகி
விட்டார்கள்.ஆனால் தமிழர்களோ பலசாலிகள் அதனால் இறுதிவரை போரிட்டு வீழ்ந்தார்கள்..

இருந்தாலும் வருங்காலத்தில் இலங்கை இந்தியாவுடன் இணக்கமாக இருக்க வேண்டுமென்றால் மதரீதியாகவும்
இன ரீதியாகவும் நம்மோடு சங்ககாலம் தொட்டே நம் முடன் இணைந்துவரும் இலங்கை தமிழர்களுக்கு
உதவிகள் செய்து அவர்களை வளமாக்குவது இந்தியா வின் கடமை அதைதான் மோடி செய்து கொண் டிருக்கி றார்.இல்லைஎன்றால் மத அடிப்படையில் இணைந்து ள்ள சீனாவும் இலங்கையும் வருங்காலத்தில்அரசியல்
ரீதியாகவும் இணைந்து விடும் அபாயம் உள்ளது.

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply