சேலம் to சென்னை 8 வழி சாலை பற்றி பொய்யான தகவல்களை பரப்புவோர்களுக்கும் அதை உண்மை என்று அறியாமல் பார்வேடு செய்யும் நண்பர்களுக்கு சில கேள்விகள்🚗

1. ஜிண்டால் நிறுவனத்திற்கு கனிமவளங்கள் எடுப்பதற்காக ரோடு போடபடுகிறது என்கிறார்கள் முதலில் தகவல் உரிமை சட்டத்தில் சென்று அப்படி ஒரு திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்து உள்ளதா? என்று கேட்டு பாருங்கள் அப்படி எதுவும் அனுமதி கொடுக்கவில்லை.

2. இதே போராளிகள் 2 வருடங்கள் முன்பு ரேசன் கடைகளை மூடுபடுகிறது என்றார்கள். வங்கியில் டெபாஷிட் பணத்தை அரசு எடுத்து கொண்டுவிடும் என்று பொய்யான தகவல்களை பரப்பினார்கள்.

3. மதுரையை சுற்றியுள்ள மலைகளை அழித்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்யத PRP க்கு எதிராக இவர்கள் போராட்டங்கள் நடத்தியது உண்டா?

4. தாது மணல்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த வைகுண்டராஜன் ( நியூஸ் 7 சேனல்) உரிமையாளரை எதிர்து போராட்டம் நடத்தியது உண்டா?

5. ஏரி, குளம், குட்டைகள், விவசாய நிலங்களை வாங்கி ரியல்எஸ்டேட் செய்யும் நபர்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியது உண்டா?

6. ஆம்பூர், ராணிப்பேட்டை ஊர்களில் சாயகழிவுகளிலால் விவசாய நிலங்கள் பாதிக்கபடுகிறது இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியது உண்டா?

7. காவிரி ஆற்றில் மணல் கொள்ளை நடத்தி அண்டை மாநிலகளுக்கு விற்பனை செய்பவர்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தியது உண்டா?

8. சுதந்திரம் அடைந்த போது எத்தனை ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தது இப்போது எத்தனை ஏக்கர் இருக்கிறது என்று எண்ணிபாருங்கள் இன்று இந்தியாமுழுவதும் எத்தனை ரோடுகள் போடப்பட்டு உள்ளது அவைகள் எப்படி போடபட்டது என்று தெரியுமா?

9. ஜிண்டால் நிறுவனம் கனிமவளங்களை ( ஒரு பேச்சுக்கு என்று சொன்னால் ௯ட) இந்த சாலைவழியாகதான் கொண்டு போகவேண்டும் என்று அவசியம் இல்லை சேலம் ஆத்தூர் நான்கு வழியாக கொண்டு செல்ல முடியாத?

10. தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை சாலைகள் போடப்பட்டு உள்ளது அவை அனைத்தும் விவசாய நிலங்கள் வழியாக தானே போடாப்பட்டு உள்ளது அப்போது எங்கே போனார்கள் இந்த திட்டத்திற்க்கு எதிராக பிரச்சாரம் செய்யும் சமூகவிரோதிகள்.

ஆகவே இவர்களின் நோக்கம் *தமிழ்நாட்டில் மோடி எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்கவேண்டும் என்பதற்காக மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்* சில இளைஞர்களும் அதை உண்மையா என்று ௯ட தெரியாமல் பார்வேடு செய்கிறார்கள். இளைஞர்கள் இன்று உங்கள் மொபைலில் இருந்து ஒரு செய்தி உண்மையா? பொய்யா? என்று தெரிந்து காெண்டு பதிவை பரப்புங்கள்.

சிவா சலிப்புலியார்

Leave a Reply