ஐதராபாத்துக்கு வருகைதந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்புக்கு பிரதமர் மோடி மரத்தால்செய்யப்பட்ட பெட்டியை பரிசளித்தார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்தமாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இந்தமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு இவர் தலைமை தாங்கி அழைத்து வந்தார். இவாங்காவுக்கு மிரட்டல்கள் இருப்பதால் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே நேற்று இரவு வரலாற்று சிறப்பு மிக்க பலாக்னுமா அரண்மனையில் அரசு சார்பில் சிறப்புவிருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்தில் இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகர் ராவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், முதல்முறையாக இந்தியா வந்துள்ள அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்மகள் இவாங்கா டிரம்புக்கு பிரதமர் மோடி மரத்தினால் ஆன பெட்டியை பரிசாக அளித்துள்ளார்.

மரத்தால் ஆன இந்தபெட்டி குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் பாரம்பரிய கைவினை கலைஞர்களால் செய்யப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply