இஸ்லாமியர்களுக்கு நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டிரு ப்பதாக ஹமீது அன்சாரி தெரிவித்த கருத்துக்கு பா.ஜ.க  கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.

இஸ்லாமியர்களுக்கு இந்தியாவைவிட பாதுகாப்பான நாடு வேறெதுவும் இருக்கமுடியாது என்றும் இந்துகளை விட சிறந்த நண்பர்கள் யாரும் இருக்க முடியாது என்றும் பா.ஜ.க பிரமுகர் ஷானவாஸ் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இங்குதான் ஹமீது அன்சாரியை நாட்டின் மிகஉயர்ந்த பதவிகளில் ஒன்றில் தொடர்ந்து 10 ஆண்டுகள் வைத்திருந்தார்கள் என்று பா.ஜ.க தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் பிரீத்திகாந்தி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply