இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும்எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நடப்பாண்டு, ஏப்ரல், 1க்கு பின், இ.பி.எப்., கணக்கில்சேரும் தொகையில், 60 சதவீதத்திற்கு கிடைக்கும் வட்டி மீது மட்டுமே வரி விதிக்கப்படும். இந்த தொகையை, மீண்டும், ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடுசெய்தால், முழுவதும் வரி விலக்கு அளிக்கப்படும்; அதேநேரத்தில், பி.பி.எப்., தொகைக்கு, முழு வரிவிலக்கு தொடர்கிறது. இவ்விஷயத்தில் அரசின் நோக்கம், வருவாய் அதிகரிப்பு அல்ல. தொழிலாளர்கள் அனைவரும், ஓய்வூதிய திட்டத்தில் சேரவேண்டும் என, அரசு விரும்புகிறது. ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த நபர் மரணம் அடையும் பட்சத்தில், அவரது வாரிசு தாரருக்கு அத்தொகை மாற்றம் செய்யப்படும் போதும், வரி விலக்கு அளிக்கப்படுகிறது. தொழிலாளர்களின், இ.பி.எப்., கணக்கில் சேரும் 100 சதவீத பணத்தையும் அவர்கள் எடுத்துக் கொள்ளும்போது, எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அப்பணத்தை, ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யாவிட்டால், அவர்களின் உடல்நலன் தொடர்பான பிரச்னைகளுக்கு அரசு பொறுப்பேற்கும் நிலை உருவாகிறது.எனவே, ஓய்வு பெறும் தொழிலாளர்கள், இ.பி.எப்., தொகையில்இருந்து, 40 சதவீத பணத்தை

பயன்படுத்தி கொள்வதையும், மீதமுள்ள 60 சதவீததொகையை,ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதையும், அரசு ஊக்குவிக்கிறது.இபிஎப்., தொகைக்கான, மீதமுள்ள 40 சதவீத தொகைக்கான வட்டிக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. 2016, ஏப்ரல் 1ம் தேதிக்கு முன், இ.பி.எப்., கணக்கில் சேர்ந்த தொகைக்கான வட்டி மீது வரி செலுத்தத் தேவையில்லை. இ.பி.எப்., கணக்கில், தொழிலாளி மற்றும் முதலாளி தரப்பில் செலுத்தப்படும் அசல் தொகை முழுவதற்கும் வரி விலக்கு தொடர்கிறது.

Leave a Reply