கடின உழைப்பிற்காக அமித்ஷாவுக்கு பாராட்டுகள். பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி.130 கோடி மக்களுக்கு தலை வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன்

2019 தேர்தல் முடிவு புதிய இந்தியாவுக்கானது. புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும் என்ற எங்கள் வேண்டுகோளுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். உலக ஜனநாயகத்தில் இந்தவெற்றி முக்கியமானது. ஜனநாயகத்தில் தேர்தல் மிகப் பெரிய திருவிழா.உலக நாடுகள் இந்தியாவில் நடந்த ஜனநாயகத்தை உற்று கவனித்தன. இந்த தேர்தலில் மக்கள் அதிகளவு ஓட்டளித்தனர். கடும் வெயிலிலும் மக்கள் ஓட்டு போட்டனர்.

சிறப்பாக தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும், பாதுகாப்பு படையினருக்கும் நன்றி.1984ல் 2 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றோம். இப்போது தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளோம்.பா.ஜ.,வுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. எங்களை தேர்வுசெய்ய நாடு ஒன்றுபட்டுள்ளது. தேர்தலின்போது உயிர்நீத்த மக்களை நான் மதிக்கிறேன். உலகத்திற்கு ஒரு உதாரணத்தை இந்தியா உருவாக்கியுள்ளது.

இந்ததேர்தலில் நாடு வென்றுள்ளது. நாட்டுமக்கள் வெற்றியை பெற்றுள்ளனர். நாங்களும், எங்கள் கூட்டணியினரும் வெற்றியை மக்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம். ஒடிசா, ஆந்திரா, சிக்கிமில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பா.ஜ., ஆளாத மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும். கூட்டாட்சி தத்துவம், அரசியல் சாசனத்தில் பா.ஜ.,விற்கு முழு நம்பிக்கை உள்ளது. வரி கட்டுவோர் ஒவ்வொருவருக்கும் கிடைத்தவெற்றி.

விவசாயிகளுக்கு கிடத்தவெற்றி.பா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றி நேர்மைக்கானது.மோடிக்கானது அல்ல.இந்ததேர்தலில் தான் ஊழல், விலைவாசி உயர்வு போன்றவை விவாதப் பொருளாக இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக மதசார்பின்மை விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. போலி மதசார்பற்றவர்கள் நாட்டை தவறாக வழிநடத்தினர்.

இந்தியாவிற்கு அதிகாரம் அளிக்க செய்வது எங்களின் இலக்கு.இந்தியாவில் இரண்டு ஜாதிமட்டுமே உள்ளது. ஒன்று ஏழை மற்றொன்று, வறுமையிலிருந்து ஏழைகள் வெளியேவர உதவுபவர்கள். தேசம் மீண்டும் மீண்டும் ஒருமுறை நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

மனதை மூடிக்கொண்டவர்களுக்கு மக்களின்குரல் கேட்காது.நாட்டின் நலனுக்காக, அனைவரையும் அரவணைத்து அழைத்துசெல்ல வேண்டும். வலிமையான எதிரிகளையும் கூட உடன் அழைத்து செல்ல வேண்டும். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து அழைத்து செல்வேன். எப்போதும் எனக்காக எதுவும் செய்யமாட்டேன்.

யார் மீதும் எனக்கு தவறான எண்ணம் கிடையாது. நானும் தவறு செய்திருக்கலாம். அதற்காக யாரையும் நான் பழி வாங்கியதில்லை. உங்கள் அன்பால் என்னை ஆசீர்வதித்து உள்ளீர்கள். ஒவ்வொரு நிமிடமும் என்னை தேசத்திற்கு அர்ப்பணித்து கொண்டுள்ளேன்.

பிரதமர் நரேந்திர மோடி 

Comments are closed.