உச்ச நீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக தீபக்மிஸ்ராவை மத்திய அரசு நியமித்து அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருப்பவர் ஜே. எஸ்.கெஹர். இவரது பதவிகாலம் இந்த மாதம் 27ம் தேதியோடு முடிவடைகின்றது. இந்தநிலையில் அடுத்த தலைமை நீதிபதியைத் தேர்வுசெய்யும் பணியில் மத்திய சட்ட அமைச்சகம் இறங்கியது.

அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை தற்போது தலைமை நீதிபதியாக இருப்பவர்தான் பரிந்துரைக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் ஜேஎஸ்.கெஹரிடம் சட்ட அமைச்சகம் கருத்துகேட்டது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி பதவிக்கு, தற்போது நீதிபதியாக இருக்கும் தீபக்மிஸ்ரா பெயரை ஜே.எஸ்.கெஹர் பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து, அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமித்து மத்திய அரசு அறிவிப்புவெளியிட்டுள்ளது. பாட்னா, டெல்லி உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் தீபக்மிஸ்ரா. நிர்பயா, ஜல்லிக்கட்டு, யாகூப் மேமன் வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை தீபக் மிஸ்ரா வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply