உணவுப்பொருள் பாதுகாப்பு, தர நிர்ணயம் ஆகியவற்றில் புதியவிதிகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஏற்படுத்தியிருப்பதாக மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அளித்த பதில் வருமாறு:

உணவுப் பொருளின் தரநிர்ணயம், பரிசோதனை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவது ஒரு தொடர்நடைமுறை. இக்காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம், புதிய தர நிர்ணயத்தை உருவாக்கியுள்ளது. இப்புதியவிதிகள் தற்போது பொதுக்களத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவை உணவுப்பொருளின் சேர்மானங்கள், தரம், பாதுகாப்புவரம்புகள், மூலப் பொருள்களின் பாதுகாப்பு விஷயங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுவது தொடர்பான விவகாரங்கள் சம்பந்தப்பட்டவை. இப்புதிய வழிகாட்டு நெறிமுறைகள்மீது பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டபிறகு அவை அறிவிக்கையாக வெளியிடப்படும் என்றார் அமைச்சர்.

Leave a Reply