அனிதா மரணம் தற்கொலை அல்ல கொலை என்கிறார் ஸ்டாலின் அதையேதான் நாங்களும் சொல்கிறோம். குற்றம் சாட்டப்படவேண்டியவர்கள் அவர்கள் தான்.

அப்பாவி மாணவி நீட் மதிப்பெண் குறைந்ததால், மருத்துவ படிப்பு கிடைக்காத நிலையில் தானே விவசாயம்  படிப்பதாக முடிவிலிருந்த மாணவி அனிதாவை சென்னைக்கும், டெல்லிக்கும் அழைத்து சென்று முறையிட தூண்டி, பல வகையில் படம் எடுத்துவைத்து கையில் வைத்துக் கொண்டு எப்படி முடிக்க வேண்டுமோ அப்படி முடித்துள்ளார்கள். ஏறக்குறைய நீட் தேர்வு ஒதுக்கீடு தமிழகம் எங்கும் அமைதியாக நடந்து முடியும் சூழ்நிலையில். அது அமைதியாக நடந்து முடிந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த மாணவியின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதுமட்டுமின்றி அம்மாணவியின் உயிரை வைத்து இம்முடிவுக்கு உச்சநீதிமன்றம் தான் காரணம் என்பதனை தெரிந்தபோதும் உள்நோக்கத்தோடு தொடர்ந்து பாரதப் பிரதமர் மோடி அவர்கள் விமர்சிக்கப்படுகிறார். தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அரசியல் சூழ்ச்சியை ஜனநாயக ரீதியில் எதிர்க்கொள்வோம்.

உங்கள் கூட்டணியின் முக்கிய தலைவர் சிதம்பரம் மனைவி தொடுத்த வழக்கினால் தான் மத்திய அரசு நீட் தேர்வுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைக்க முடியவில்லை, சட்ட விதிகளின் படி நீட் எதிரான கருத்துக்கள் உச்ச நீதிமன்றத்தில் எடுபாடாது என்பதால் தான் தமிழக அரசு விரும்பிய படி மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டுவர இயலவில்லை.

சமூகநீதி பேசுபவர்கள் நளினி சிதம்பரத்தை இவ்வழக்கை முன்னெடுக்க வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுடிருந்திருக்கலாமே.

ஆக காங்கிரஸ் தலைவர் மனைவி நீட்டுக்கு ஆதரவாக வாதாடட்டும், நீட் வரட்டும், நாம் அரசியல் ஆட்டத்தை ஆடிக்கொள்ளலாம் என்ற உள்நோக்கம் தானே உங்களுக்கு? நீங்கள் நினைத்திருந்தால் வழக்கை தடுத்திருக்க முடியும். சமூகநீதி பேசும் நீங்கள் உங்கள் கூட்டணியில் சமூகநீதிக்கு ஆதரவு இல்லையா? நளினி அவர் தொழில் வியாபாரம் செய்தார். நீங்கள் அரசியல் வியாபாரம் செய்திருக்கிறீர்கள்.

இந்தப் போராட்டக்காரர்களுக்கு பின்னால் மூட்டை மூட்டையாக இதுவரை தனியார் மருத்துவ கல்லூரிகளில் தகுதியில்லாதவர்களுக்கும், கோடிகளுக்கு டாக்டர் சீட் விற்ற தனியார் கல்வி வியாபாரிகள் அனைவரும் உங்கள் அரசியல் வியாபாரத்திற்கு பின்னால் இருக்கிறார்கள் என்ற உண்மையை மக்களுக்கு புரியவைப்போம்.நீங்கள் நினைத்திருந்தால் திமுக வில் இருக்கும் முன்னாள் மந்திரிகள், கல்வி தந்தைகள் தாங்கள் நடத்தும் மருத்துவ, பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏதோ ஒரு வகையில் உதவுவதாக உறுதி அளித்து உயிரை காப்பாற்றி இருக்கலாமே, உங்களிடம் அழைத்து வந்த உங்கள் உள்ளூர் கட்சியினர் மூலம் இதை ஏன் செய்யவில்லை.

தமிழ் தமிழ் என்று சொல்லி வந்தார்கள் தங்கள் நிறுவனங்களுக்கே தமிழ்ப்பெயர் வைக்காத திமுக தமிழை அரியணை ஏற்றவில்லை ஆனால் மத்திய அரசு தமிழில் நீத்தேர்வு எழுத  வாய்ப்பு அளித்து, அதனை 15000 கிராமப்புற மாணவர்கள் எழுதியுள்ளார்கள், கிராமப்புற மாணவர்களுக்கும் தமிழ்வழி மாணவர்களுக்கும் எதிராக அல்ல நீட் தேர்வு என்பதனை மக்களுக்கு புரியவைப்போம்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் எதிர் கொள்ளும் ஒரு நீட் தேர்வை கல்வித்தரம் இல்லாத இந்த சூழ்நிலையிலும் கூட நமது  மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 63 சதவீதம் மாணவர்கள் தேர்வாகி உள்ளார்கள் என்றால் இது மாநில பாடத்திட்டத்திற்கு எதிரானதா? நீட் தேர்வு வினாத்தாள்கள் CBSC பாடத்திட்டத்தில் 60 சதமும், மாநில பாடத்திட்டத்தில்  40 சதவீதம் +1 மற்றும் +2 பாடத்தில் வந்துள்ளது. +1 பாடம் நடத்தாமல் +2 பாடம் மட்டும் கவனம் செலுத்திய மாணவர்கள் தான் கஷ்ட்டப்பட்டார்கள் என்பதனை தமிழக மக்களுக்கு புரிய வைப்போம். கடந்த காலத்தில் மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில ரேங்க் மூலம் சென்னை மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் சுமார் 30 சதவீதம் பேர் முதலாண்டு MBBS படிப்பில் தேர்ச்சி அடையவில்லை என்பதுதானே உண்மை. இவர்கள் பெரும்பாலும் நாமக்கல் திருச்செஙகோடு பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் படித்தவர்கள் என்பது நிதர்சனம்.

நன்றி

Dr. தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்

Leave a Reply