"விளம்பரத்திற்காக மோடி அரசு ரூ.4,343 கோடி செலவு! " உண்மை தான் செலவு செய்துள்ளார்கள்…. ஆனால்

மத்திய அரசின் மலிவு விலை மருந்துக் கடைகள் மூலம் மருந்து பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வழி செய்துள்ளது மோடி அரசு. அதாவது மிக புரியும் படி கூறினால் Ciprofloxacin என்ற மாத்திரியின் விலை 55ரூபாய் என்றால் மத்திய அரசின் மருந்துக் கடையில் இது 13ரூபாய்க்குக் கிடைக்கும். காரணம் generic drugs. மாத்திரிக்கு கம்பெனி பெயர் எல்லாம் இல்லாமல் மருந்தின் பெயருடன் வெளியிடுவதால் விளம்பரம் செய்வது – மாத்திரை எழுதும் மருத்துவருக்கு கமிசன் கொடுப்பது – மருந்து விற்பனையாளர்களுக்கு என்று பலதரப்பட்ட இடங்களுக்கு கமிசன் கொடுக்க விலை 55ரூபாயாக உள்ளது. அதே மருந்தை அரசு தன் மருந்துக் கடைகளில் 13ரூபாய்க்குக் கொடுக்க காரணம் பிராண்ட் விளம்பரம் தேவை இல்லை – அந்த கமிசன் எல்லாம் இல்லை. ஒரே வருடத்தில் 956 கடைகளைத் திறந்தனர். தனியார் பங்களிப்பும் வரவேற்றனர்.

இந்தத் திட்டம் சென்று மக்களிடம் சேர என்ன செய்ய வேண்டும் அரசு????

காச நோய் முதல் கைகழுவி விட்டு சாப்பிட வேண்டும், பெண் குழந்தைகள் கல்வி வரை மக்களிடம் கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும்???

விளம்பரம் தானே படுத்த வேண்டும். அரசு செயல்படுத்து பல நூறு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேறு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் செய்யலாம். அதைப் பற்றி என்றாவது புதிய தலைமுறை கார்த்திகை செல்வன் இல்லை செந்தில் விவாதம் செய்யலாமே. அரசின் மக்கள் நலத் திட்டங்களை எப்படிக் கொண்டு சேர்ப்பது அரசுக்கு விளம்பர செலவு இல்லாமல். நடத்த நீங்கள் தயாரா???

அது சரி அவ்வளவு யோக்கியவான்கள் இந்தப் பத்திரிகைகள் என்றால் நீங்கள் இது போல நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லக் காசு வாங்க மாட்டோம் ஒரு பக்கம் என்றுப் பத்திரிகைகள் சொல்லட்டும். நலத் திட்டம் விவரங்கள் மக்களைச் சென்று சேர்க்க இது நாங்கள் செய்யும் உதவி என்று தினகரன் , தி இந்து ஆரம்பித்து The Indian Express வரை உள்ள அச்சு ஊடகங்கள் , ஆனந்த விகடன் போல வார இதழ்கள் எல்லாம் கொஞ்சம் முடிவு பண்ணுங்களேன்!!! பண்ண மாட்டேங்க … சரி தானே.

எங்கே புதிய தலைமுறை கார்த்திகை செல்வன், தினத்தந்தி ஹரி , நியுஸ் 7 உங்கள் டீவியை வாயைத் திறந்து நாங்கள் அரசின் நலத் திட்டங்களை இலவசமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒளிபரப்பத் தயார் என்று கூற சொல்லுங்கள். அரசுக்கு விளம்பர செலவு மிச்சம்.. எங்கே வாயைத் திறக்க சொல்லுங்கள்.

நடிகர் விஜய் நடிப்பாரா இல்லை சிவகார்த்திகேயன் நடிப்பார விழிப்புணர்வு விளம்பரங்களில் இலவசமாக????

அரசு போலியோ விழிப்புணர்வு முதல் கை கழுவிய பின் சாப்பிட வேண்டும் என்று ஒரு பொது நல விஷயம் விளம்பரம் செய்ய உங்கள் டீவியில் மாதம் எவ்வளவு கேட்கிறேங்க ???? புதிய தலைமுறை டீவி உங்களைத் தான் கேட்கிறோம்.. எவ்வளவு ???? ஒரு சில நாட்கள் விளம்பரம் போடவே சில லட்சம் வேண்டும்.

அப்போது நாடு முழுவதும் டீவிகளில் காசநோய் விழிப்புணர்வு செய்ய ஒரு ஆளும் அரசு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அறிவுரை சொல்லுங்கள்????பொறுப்பும் பொதுநலனும் என்று வாய் கிழிய பேசும் மாபியா கும்பல் நடத்தும் நியுஸ்7 நிறுவனம் – அரசின் விழிப்புணர்வு இது போல சில குறிப்பிட்ட விளம்பரங்களை அரசுக்கு இலவசமாகச் செய்ய வேண்டியது தானே. முடியாது தானே???? அப்போ கேட்கவும் தகுதி கிடையாது. ஏன் என்றால் வாங்கி தின்றது நீங்கள் அனைவரும் தான்.

செலவு கூடிவிட்டது? என்று செய்தி போட்ட உங்கள் எல்லாருக்கும் கேட்கிறேன் – போன மூன்று வருடங்களில் விளம்பர கட்டணத்தை கூட்டியது நீங்கள் தானே அய்யா. உங்களுக்குத் தானே அரசு செலவு செய்கிறது. நீங்கள் கூட்டினால் செலவும் கூட தானே செய்யும்! என்ன NDTV , outlook போன்ற நிறுவனகளுக்கு விளம்பரம் தருவதை குறைத்துக் கொண்டது அரசு. எனவே அரசை அவமானம் செய்ய துடிக்கிறது இந்த கம்யூனிஸ்ட் நடத்தும் செய்தி நிறுவனங்கள். வேறு என்ன !!!!

இறுதியாக :

தி இந்து, the indian express போன்ற செய்தி நிறுவனங்களை நான் கேட்கிறேன் இதே செய்தியை என்ன ஏதாவது ஆள் வைத்து நேரம் முடிவு செய்து திரும்பத் திரும்ப வெளியிடச் சொல்லி உங்கள் முதலாளி சீனாவும், உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியும் தலைவர்களும் கூறுகிறார்களா??? ஏன் கேட்கிறேன் என்றால்

இதே செய்தியை தான் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் தேர்தல் நேரம் உங்கள் NDTV வெளியிட்டது. the hindu(ஆங்கிலம்) – Hindustan Times டிசம்பர் 8ஆம் தேதி வெளியிட , Outlook & NDTV அதே செய்தியை 9ஆம் தேதி வெளியிட அதான் காங்கிரஸ்க்கு தேர்தல் வேலை நல்லாவே கம்யூனிஸ்ட் பத்திர்க்கைகள் பார்த்தேங்க. இப்போது என்ன அடுத்த 2019தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் ஆகிவிட்டதா???

இப்போது என்ன அதே செய்தி கொஞ்சம் செலவை சேர்த்து புதிய செய்தியாக வெளியிட்டு 2019க்கு பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் ஆகிறேங்க அப்படி தானே. கம்யூனிஸ்ட் ஊடகங்களுக்கு வெக்கமே கிடையாது எத்தனை முறை அவமானம் செய்தாலும். கொஞ்சமாது அசிங்கம் அவமானம் என்று சிந்திக்கவும். நீங்கள் எல்லாம் பத்திரிகையா நடத்துறேங்க????

இந்தச் செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனங்களை நான் கேட்கிறேன் :

எந்த எந்த டீவிக்கு , செய்தி நிறுவனத்திற்கு, ரேடியோவிற்கு – என்ன என்ன அரசு திட்டங்களுக்கு ,அரசு எவ்வளவு விளம்பரம் வெளியிட்டது என்றும் – அதன் மூலம் செய்தி நிறுவனங்கள் எவ்வளவு லாபம் வருமானம் அடைந்தீர் என்றும் முழு விவரத்தை வெளியிட தி இந்து முதல் புதிய தலைமுறை நிறுவனம் வரை முழு தகவலையும் வெளியிடத் திராணி உண்டா????

{இங்கே ஊடக சுதந்திரம் என்று கூறி கொண்டு தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்கள் அனைத்துச் செய்தி ஊடக முதலாளிகளும். இவர்கள் 1% கூடச் செய்தி வெளியிட விருப்பம் இல்லை. எப்படி செய்தியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவை இவர்கள் எடுத்து அதற்கு தக்க செய்திகளை தலைப்பு கொடுத்து – செய்தியை மறைத்து திரித்து மக்களை ஆட்டு மந்தைகள் போல நடத்த விருப்புகிறார்கள்.}

நன்றி -மாரிதாஸ்

Leave a Reply