டாக்டர் படித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்த பாஜக எம்.பியின் மகள்.. உத்தரகாண்டை கலக்கிய அரசியல் வாரிசு

உத்தரகாண்டின் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக எம்.பியுமான ரமேஷ் போக்ரியாலின் மகள் டாக்டர். ஷ்ரேயாசி போக்ரியால் இந்திய ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறார்.

பொதுவாக அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலுக்கு செல்வதும், சினிமாவில் நடிக்க செல்வதும், தனியார் நிறுவனங்கள் தொடங்குவதும் வழக்கம். ஆனால் பாஜக எம்.பி ரமேஷ் போக்ரியாலின் மகள் டாக்டர். ஷ்ரேயாசி போக்ரியால் இந்திய ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறார்.

அவரது குடும்பத்தில் இருந்து முதல்முதலாக ராணுவத்தில் சேரும் நபர் இவர்தான். சிறுவயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று இவருக்கு விருப்பம் இருந்ததாக அவரது தந்தை கூறியுள்ளார்.

ஷ்ரேயாசி போக்ரியாலுக்கு மருத்துவம் படித்து முடித்ததும் வெளிநாட்டில் வேலை பார்க்க நிறைய வாய்ப்புகள் வந்துள்ளது. சில பெரிய வெளிநாட்டு மருத்துவமனைகள் அதிக சம்பளத்தில் இவரை வேலைக்கு கேட்டு இருக்கிறார்கள்.

ஆனால் ஷ்ரேயாசி போக்ரியால் அவரது தந்தையிடம் கண்டிப்பாக இந்திய ராணுவத்தில்தான் வேலை செய்வேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் இந்திய ராணுவத்தின் மருத்துவ படையில் சேர்ந்துள்ளார்.

ரூர்கி பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமணையில் இன்றுமுதல் இவர் பணியை தொடங்க உள்ளார். இவரது புகைப்படத்தை மக்கள் இணையதளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply