ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்காக இதர கட்சி தலைவர்களுடன் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக. தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

 

கடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போது காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட பிரதிபாபாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜியை சிவசேனா ஆதரித்து இருந்தது. இம்முறை ஜனாதிபதிதேர்தலில் எங்களது முடிவு தனிபாணியாக இருக்கும் என்று சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

இதனையடுத்து, மும்பையில் உள்ள சிவசேனாகட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சந்தித்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனையின் போது பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஆதரவுஅளிக்குமாறு சிவசேனாவிடம் பாஜக கோரியதாக தகவல்கள் வெளியாகின்றன.

Leave a Reply