தங்களுக்கு 35 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் உத்ரகாண்டில் ஆட்சியமைக்க  உரிமை தர வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

உத்தரகாண்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆட்சியமைத்த காங்கிரஸ் முதலமைச்சர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக அவரது கட்சியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.,க்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

பாஜக.,வுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், உத்தரகண்டில் காங்கிரஸ் அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் சட்டப்பேரவையில், பட்ஜெட் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாஜக எம்எல்ஏக்களும், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களும் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.

இதனை தொடர்ந்து அங்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், ஆளுநரை பாஜக.,வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 25 பேர் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனைதொடர்ந்து இன்று பாஜக எம்எல்ஏ கைலாசுடன் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா.,வை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply