உ.பி.,யில் மாற்று திறனாளிகள் கடன்தள்ளுபடி செய்வது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்துவருகிறது.
உ.பி.,யில் முதல்வராக பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்ய நாத் உள்ளார். அவர் பதவியேற்ற சிலநாட்களில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடிசெய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாற்றுதிறனாளிகள் கடன்தள்ளுபடி செய்வது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்துவருகிறது.


இதுதொடர்பாக மாநில அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் கூறியதாவது: அடுத்த 100 நாளில் மாற்றுத் திறனாளிகள் அமைச்சகம், ரூ.3.88 கோடி மதிப்புள்ள மாற்று திறனாளிகள் கடன்களை தள்ளுபடிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் 6,821 பேர் பயன்பெறுவார்கள். மாற்று திறனாளிகள் 1.60 கோடி ரூபாய் கடனை திருப்பிசெலுத்தி உள்ளனர்.


விவசாயிகள் கடன் தள்ளுபடி போல், மாற்று திறனாளிகள் கடனும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என விரும்புகிறோம். மத்திய அரசின் திறன் வளர்ச்சி திட்டத்தில், மாற்று திறனாளிகளை இணைக்க மாநில அரசு எடுத்துவருகிறது. குடிசை தொழில், சிறுகுறு தொழில்செய்ய அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து, அவர்கள் தொழில்துவங்க வழங்கப்படும் நிதியுதவி, ரூ. 30 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும். மாநில அரசால் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் பென்ஷன் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply