பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:-அ.தி.மு.க.வை பொருத்த வரை ஒரே தலைமையை நம்பி இயங்கும் அமைப்பில் உட்கட்சி பிரச்சனைகள் ஏற்படுவது இயல்புதான். தமிழகத்தில் திராவிடகட்சிகளுக்கு ஒரே மாற்று, பா.ஜனதா மட்டுமே. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ்கட்சி காணாமல் போய் விட்டது.

தமிழகத்தை பொருத்தவரை எடப்பாடி தலைமையிலான அரசு கடந்த ஓராண்டுகளாக செயல்படவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அரசாங்கம் முடங்கிவிட்டது.

தமிழகம் முழுவதும் அரசாங்கமே மணல் விற்பனைசெய்யும் என்று சொன்னார்கள். அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?தமிழகத்தை பொருத்தவரை கல்வி அமைச்சகம்தவிர மற்ற துறைகள் முடங்கிபோய் நிற்கிறது.

அ.தி.மு.க.வை ஓரணியாக திரட்டும் வி‌ஷயத்தில் டி.டி. வி. தினகரன் 60 நாள் கெடுவிதித்து இருக்கிறார். இதனால் என்ன நடந்து விடப்போகிறது?. ஒரு தப்பு செய்துவிட்டோம் என்று தெரிந்தும், அடுத்தபடியாக தவறு செய்கிறார்கள். உப்புதின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். மாற்று சிந்தனை உடையவர்களை ஒருங்கிணைத்து செயல்படவேண்டியது அந்த கட்சியின் பொறுப்பு.

தமிழக அரசை நாங்கள் பின்னிருந்து இயக்குவதாக சொல்கிறார்கள். நாங்கள் எந்த அரசாங்க த்தையும் முன்னிருந்து இயக்குவோமே தவிர, பின்னிருந்து இயக்குவது இல்லை.

மு.க.ஸ்டாலின்தான் அப்படி சொல்கிறார். எதிர்காலத்தில் எப்படியாவது முதல் அமைச்சராகி விடலாம் என்று கனவு காணுகிறார். அது ஒரு போதும் நடக்காது.பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மாதிரி வேறுயாரும் பேசி இருப்பார்களா?

அந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக போதிய நிதி ஒதுக்கி தருகிறது.திண்டுக்கல்-தேனி இடையிலான ரெயில்வே திட்டங்களுக்கு போதியநிதி ஓதுக்குவது பற்றி ரெயில்வே அமைச்சகத்திடமே பேசி அழுத்தம் கொடுத்து வருகிறேன்.

நான் பயணிகள் டிக்கெட் கட்டணம் மற்றும் இதரவி‌ஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் ரெயில்வே கமிட்டியில் உறுப்பினராக உள்ளேன். மத்திய ரெயில்வே அமைச்சகம் 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. அடுத்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படும்பட்சத்தில், திண்டுக்கல்-தேனி ரெயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply