ஐ.எஸ் ஆதரவு தேசவிரோத மாணவர் அமைப்பின் தலைமறைவானத் தலைவர் உமர் காலித்-இன் நெருங்கிய தோழி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டேனியல் ராஜா அவர்களின் மகள் செல்வி அபராஜிதா தான் எனத் தெரியவந்துள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பயங்கரவாதி அப்ஸல் குருவுக்கு நினவேந்தல் நடத்திய பிரிவினைவாத மாவோ நக்ஸல் குழுக்களோடு இவருக்குள்ள மிக நெருக்கமான தொடர்பும் அம்பலம் ஆகியுள்ளது.

கேரளாவிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்த இஸ்லாமிய மாணவர்களும், நக்ஸல் பின்புலம் உள்ள மாணவர்களும் ஒன்று சேர்ந்து பிரிவினைவாதம் என்ற ஒரே புள்ளியில் இயங்க தொடங்கியதும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முன்பில்லாத அளவுக்குத் தேசவிரோத, தேசத்துரோக, பிரிவினைவாதச் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

இந்தியாவுக்கு எதிரான இந்தப் பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்புகள் JNU-வில் சிறிய சிறிய குழுக்களாக இயங்கிய போது பல்கலைக்கழக நிர்வாகிகள் வாய்மூடி மௌனமாக இருந்ததன் விளைவே JNU-வின் இன்றைய நிலைமைக்கு மிக முக்கிய காரணம் என உளவுத்துறையினர் சொல்கிறார்கள்.

தேசத்துரோகக் குற்றத்திற்கு ஆளான உமர் காலித் உட்படப் பலர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் மறைந்திருப்பதாகக் காவல்துறை வட்டாரத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் மாணவர் விடுதியில் சோதனை நடைபெறும் என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

"தேசத்துரோக கோஷம் எழுப்பிய தேசவிரோத பிரிவினைவாத மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது" என்ற கோரிக்கையோடு டெல்லி ஜந்தர் மந்தரில் ஊர்வலம் நடத்திய மாணவர்களுக்குத் தலைமை தாங்கியவர் டி.ராஜாவின் மகளான அபராஜிதா தான். அந்த ஊர்வலத்தில் திரு டி.ராஜா மற்றும் திருமதி ஆனி ராஜாவும் பங்கெடுத்தனர்.

JNU-வில் M.Phil மாணவியும், டி.ராஜாவின் மகளுமான அபராஜிதா தேசத் துரோகக் குற்றத்தில் சிக்கிய சூழலில் திரு ராஜவும், ஆனி ராஜாவும் இடதுசாரித் தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களைச் சந்தித்தனர்.

ஆராய்ச்சி மாணவனாக JNU-வில் படித்து வந்தவனும், அப்ரஜிதாவின் "நெருங்கிய" நண்பனுமான தலைமறைவாக உள்ள "உமர் காலித்" மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சார்ந்தவன். பெரிய பணக்கார குடும்பம் இவனது. இவன் தொடர்ந்து பல்லாண்டுகளாகத் தேச விரோதச் சக்திகளோடு தொடர்பில் உள்ளவன். இவனுடைய தந்தை "சையத் காஸிம் ரஸூல் இலியாஸ்" தடை செய்யப்பட்ட "சிமி" இயக்கத்தின் தலைவனாகச் செயல்பட்டவன். தற்போது ஜமா-ஆத்-இ-இஸ்லாம் அமைப்பின் அரசியல் பிரிவான "welfare" கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக உள்ளான்.

தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிராகத் தீவிரமாகப் போராட விரும்பிய காலித் DSU-வை விட்டுப் பிரிந்து தனியாகச் செயல்படத் தொடங்கினான். இதற்கு இவனுடைய தந்தையின் ஆதரவும் உண்டாம்.

இதற்குள்ளாக இஸ்லாமிய மாணவர்களில் பெரும்பகுதியினரைத் தன்னுடைய ஐ.எஸ் வளையத்திற்குள்ளும் வீழ்த்திவிட்டான் எனக் காவல்துறையினர் உறுதிப்படுத்திவிட்டனர்.

நக்ஸல் தொடர்புடைய மாணவர் அமைப்பான ஜனநாயக மாணவர் அமைப்பின் மூலம் தேசத்துரோக சிந்தனை JNU பல்கலைக்கழக வளாகத்தில் நுழைகிறது. அதைப் போல பிற இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மூலமாகத் தீவிரவாத சிந்தனை வலுப்பெறுகிறது. ஐ.எஸ், மாவோ தொடர்புடைய பிரிவினைவாத மாணவர் இயக்கங்களை முழுச் சுதந்திரத்தோடு இயங்க அனுமதித்த காரணத்தால் தேச விரோதக் காரியங்கள் முழு வீச்சில் முடுக்கிவிடப்படுகின்றன.

இந்த தேசவிரோத சக்திகளை எல்லாம் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவன் உமர் காலித். அதன் வெளிப்பாடு தான் அப்ஸல் குருவின் நினைவேந்தல் நிகழ்ச்சி. இந்த தேசவிரோதச் செயல்பாடுகளை JNU மட்டுமில்லாது தேசம் முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் விரிவுபடுத்தச் செயலாற்றினான் இவன். இவனுக்குப் பின்புலமாகக் கிலானியும் செயலாற்றினான் என்பது கூடுதல் தகவல்.

இந்த மாதிரி ஒருவனின் "நெருங்கிய தோழி"தான் டேனியல் ராஜா அவர்களின் மகள் அபராஜிதா!

மங்களம் எனும் மலையாள பத்திரிகையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் தான் இந்தக் கட்டுரை. அந்த தினசரி பா.ஜ.க வின் சொந்தப் பத்திரிகை அல்ல. ஒரு நடுநிலை இதழின் விசேஷ நிருபர் எழுதியுள்ள உண்மைகளின் தொகுப்பு

 

Leave a Reply