சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில் இந்தியாவை இரண்டாவது இடத்துக்கு கொண்டுவரும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளதாக மத்திய உருக்குத்துறை அமைச்சர் பீரேந்தர்சிங் தெரிவித்தார்.

ஹரியாணா மாநிலம், ஜிந்த்நகரில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்துகொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

உள்நாட்டில் உருக்கு உற்பத்தியை அதிகரிக்க மத்தியஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. உருக்கு ஆலைகளில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக ரூ.62,000 கோடி செலவிடப்படஉள்ளது.

உலகளவில் உருக்கு உற்பத்தியில் இந்தியா தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. அடுத்த 2-3 ஆண்டுகளில் உருக்கு உற்பத்தியில் இந்தியாவை இரண்டாவது இடத்துக்கு கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அடுத்த ஆண்டில் 20 கோடிடன் உருக்கு உற்பத்திசெய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply