ரிசர்வ் வங்கிக்கு அரசுடன் முரண் பாடுகள் தொடர்ந்த நிலையில் ரிசர்வ்வங்கி ஆளுநர் உர்ஜித்படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங் களுக்காக ராஜினாமா செய்வதாகவும் கூறியுள்ளார்.

உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”மிகநேர்த்தியுடனும், நாட்டுப்பற்றுடனும் உர்ஜித்படேல் பணியாற்றி வந்தார். துணைகவர்னர் மற்றும் கவர்னர் என ரிசர்வ் வங்கியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பணியாற்றி யிருக்கிறார். புகழுடன் இருக்கும் போதே அவர் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு” என்று கூறியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு ட்வீட் பதிவில், ” அதிகதிறன் கொண்ட பொருளாதார வல்லுனராக உர்ஜித்படேல் இருந்தார். நாட்டின் பொருளாதாரம் குறித்த அவரது அறிவு மிகவும் பாராட்டத் தக்கது. அவரது தலைமையின் கீழ் ரிசர்வ்வங்கியின் நிதி நிலைமை சீராக இருந்தது” என்று குறிபிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ” ரிசர்வ் வங்கியின் துணைகவர்னராகவும், கவர்னராகவும் உர்ஜித் படேல் பொறுப்பு வகித்திருக்கிறார். அவரது கடமையை மத்திய அரசு பாராட்டுகிறது. அந்தபொறுப்புகளுக்கு தகுதிமிக்க நபராக உர்ஜித் படேல் இருந்தார்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply