உலகின் ஒட்டுமொத்த பால்உற்பத்தியில் 18.5 சதவீதத்தை நிறைவுசெய்து இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

உலகின் ஒட்டுமொத்த பால்உற்பத்தி வளர்ச்சி 3.1 சதவீதமாக உள்ள நிலையில் இந்தியாவின் பால் உற்பத்திவளர்ச்சி 6.26 சதவீதமாக உயர்ந்துள் ளதாக 2015-16 ஆண்டுகளுக்கான பொருளாதார புள்ளி விவரத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதனை இன்று பாராளு மன்றத்தில் தெரிவித்த மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, நாட்டில் உள்ள நுகர்வோர் அனைவருக்கும் கடந்த 1990-91 ஆண்டு வாக்கில் நாளொன்றுக்கு 176 கிராம் பால்கிடைத்து வந்தது. ஆனால், 2014-15 நிலவரப்படி அவர்களுக்கு 322 கிராம் பால் தற்போது கிடைத்துவருகிறது என கூறியுள்ளார்.

இதேபோல், நாட்டில் முட்டை மற்றும் மீன் உற்பத்தியும் கணிசமாக அதிகரித் துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply