உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் நடைபெற்ற இந்திய-தென்னாப்பிரிக்க தொழில்மாநாட்டில் பங்கேற்றவர் பேசியதாவது:

சர்வதேச அளவில் தொடர்ந்து வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இந்தியாதிகழ்கிறது. அண்மையில் சர்வதேச செலாவணிநிதியம், தனது அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

இப்போது, உலகின் மிகப்பெரிய பொருளா தாரத்தைக் கொண்ட நாடுகளின்பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 6-ஆவது இடத்தில் உள்ளது. விரைவில் இப்பட்டியில் இந்தியா 5-ஆவது இடத்துக்கு முன்னேறும். அதற்கானபாதையில் நமது நாடு பயணித்துவருகிறது. இப்போது நமது நாட்டின் பொருளாதாரத்தின் மதிப்பு ரூ.2.6 டிரில்லியன் டாலராக (சுமார் ரூ.184 லட்சம் கோடி) உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அரசின்சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும். உள்நாட்டில் உற்பத்தி, தொழில்துறையை மேம்படுத்த “இந்தியாவில் தயாரிப்போம்’ உள்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. “டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்திய பொருளாதாரம் முழுமையாக மின்னணு மயமாகி வருகிறது.

தொழில் செய்ய உகந்தநாடுகள் பட்டியலில் இந்தியாவை முதல் 50 இடங்களுக்குள் கொண்டுவர இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

அண்மையில், சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்ட அறிக்கையில், சர்வதேசளவில் வேகமாகவளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சி 7.5 சதவீதமாகவும், 2020-ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவின்வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply