*நியூயார்க் டைம்ஸ்* பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்று ள்ளது…

இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரேமாநிலம் நம் தமிழ்நாடுதான்!! உலகம் மிகப் பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒரு வருடத்தில் சுற்றிபார்ப்பது என்பது கடினமான விஷயம். இந்நிலையில் இந்தவருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது

இதில் இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே ஒருஇடம் தமிழ்நாடு தான்*  உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்குகாரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும்கட்டட அமைப்புகளும் தானாம். 

உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும் போது , அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத் திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான்.

தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

 மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்டசோழபுரம் கோயில், சிதம்பரம் கோயில், திருவண்ணாமலை, திருச்சி தாயுமானவர் கோவில், திருச்சி எறும்பியூர் மலை கோயில், மயிலாடுதுறை கோயில்  திருச்சி ஆனைக்கா இவை உலக அதிசயங்கள் செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை, இந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

 

மெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம், கனாடாவின் பெரியநகரமான டொராண்டோ, பெரிய ஹோட்டல்களுக்கு பெயர்போன துபாய், உணவுகளில் வெரைட்டி காட்டும் துருக்கியின் செஸ்மே, பழமையான நகரமான சீனாவின் ஹாங்சூ போன்ற  வரிசையில் தமிழ்நாடு 24-வது இடத்தை பெற்றுள்ளது.

இதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாஷிங்டன், பார்சிலோனா, வியட்நாம், கான்சாய், சிட்னி, க்ரீஸ் போன்ற இடங்கள் தமிழகத்தை விட பின்னால் உள்ளது என்பதுதான் தமிழகத்தின் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது.  தமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை தான் இந்த பட்டியலும் கூறுகிறது.

Leave a Reply