உலகில் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக மத்திய மந்திரி நிதின்கட்காரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது  கட்காரி பேசியதாவது:-

உலகின் வேறு எந்தபகுதியிலும் இல்லாத வகையில் இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிகமக்கள் பலியாகின்றனர். சராசரியாக ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துக்களில் 1.3 லட்சம் மக்கள் பலியா கின்றனர். 2014ம் ஆண்டில் தமிழகத்தில் அதிக பட்சமாக 67250 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. அதனை தொடர்ந்து மகாராஷ் டிராவில் 61,627 விபத்துக்களும், மத்திய பிரதேசத்தில் 53,472 விபத்துக்களும் நடந்துள்ளன.

சாலைவிபத்துக்களை தடுப்பதற்காக, மோசமான சாலை வடிவமைப்புக்கு காரண மானவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

டிரைவர்களின் தவறு, வாகனங்களின் மோசமானபராமரிப்பு, பாதசாரிகளின் தவறு மற்றும் மோசமான வானிலை ஆகியவையே சாலை விபத்துக்களுக்கு முக்கியகாரணங்களாகும்.

நெடுஞ் சாலைகளில் 100 கி.மீட்டருக்கு ஒரு மருத்துவமையம் தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply