உலக பொருளா தாரத்தில் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது இடத்தைபிடிக்கும் என்று உள்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தொிவித்துள்ளாா்.

அரக்கோணத்தை அடுத்த நகாிகுப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தெற்குமண்டல பயிற்சி மையத்தில் 31-வது பிரிவு துணை கமாண்டண்டுகள், 43-வது பிரிவு உதவி ஆய்வாளர்கள், 8-வது பிரிவு துணை உதவிஆய்வாளர்கள் உள்ளிட்டோரின் பயிற்சி நிறைவுவிழா இன்று நடைபெற்றது.

அலுவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். சிறப்பாக பயிற்சிமுடித்த 120 பெண்கள் உள்பட 1043 வீரர்களுக்கு சான்றிதழ்வழங்கி உறையாற்றினார்.

அப்போது அவா் கூறுகையில், உலக நாடுகளுக் கெல்லாம் தீவிரவாதம் பெரும்சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தியா பொருளா தாரத்தில் வளர்ச்சி அடைந்துவருகிறது. அந்நியசக்திகள் பொருளாதார வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கின்றன.

பிரதமர் நரேந்திரமோடி, தீவிரவாத செயல்களுக்கு எதிராக, உலகரங்கில் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறார். சைபர் தீவிரவாத அச்சுறுத்தல், உலகநாடுகளுக்கு மற்றுமொரு சவாலாக உருவாகி வருகிறது.

சைபர் அச்சுறுத்தலை முழுமையாக தடுக்கவேண்டும். 2030-ம் ஆண்டிற்குள் உலக பொருளா தாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும். பயங்கரவாதம், தீவிரவாதத்தை ஒழிக்க வீரர்களுக்கு பயம் இருக்கக்கூடாது. சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு பணிபுரியவேண்டும்.

அணுஉலை, விமான நிலையம் உள்பட தொழிற் சாலைகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ளன. இதனை மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் முறியடிக்க வேண்டும். மத்திய தொழில்பாதுகாப்பு படையை, தொழில் நுட்ப ரீதியாக வலுசேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று தொிவித்தார்.

Leave a Reply