இமாச்சல் பிரதேச மாநிலம் தர்ம சாலாவில், 2 நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். தொழில் துறையை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 209 வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் 16 நாடுகளைச்சேர்ந்த தூதர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை தொடங்கிவைக்கும் முன்பு, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டு, அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

Comments are closed.