நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக அமையவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் துவார காவில் நடைபெற்ற Okha – Bet Dwarka இடையே பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பேசிய பிரதமர் மோடி, இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சிக்கான சூழலை நாட்டில் ஏற்படுத்தவேண்டும் என குறிப்பிட்டார். 

விவசாயிகள் அதிக லாபம்பெற தேவையான நடவடிக்கைகளை தனது அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறிய நரேந்திரமோடி, மீனவர்கள் பெரியபடகுகளை வாங்குவதற்கு குறைந்த வட்டியில் வங்கிக்கடன் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

மத்திய அரசு கடற்பாதுகாப்பை நவீனப் படுத்தி வருவதாகக் கூறிய நரேந்திரமோடி, இதற்கான மிகப்பெரிய மையம் துவாரகாவில் அமைக்கப்படும் என்றும், அது நாட்டின் கவனத்தை ஈர்ப்பதாகஇருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply