உ.பி.,யில் நடந்த உள்ளாட்சிதேர்தலில் 16 மாநகராட்சிகளில் 14ல் பா.ஜ.,வும், 2ல் பகுஜன்சமாஜ் கட்சியும் வெற்றிபெற்றன. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் ஒருமேயர் பதவியை கூட பெற முடியவில்லை

உ.பி., மாநிலத்தில் கடந்த நவ., 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சிதேர்தல் நடந்தது. மொத்தம் 16 மாநகராட்சிகள், 198 நகராட்சிகள், 438 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன.
 

அதில் பா.ஜ., 14 மாநகராட்சிகளை கைப்பற்றியது. வாரணாசி, கோரக்பூர், காசியாபாத், பரேலி, ஆக்ரா, பிரோசாபாத், அயோத்தியா, மதுரா, லக்னோ, கான்பூர், ஷகாரான்பூர், ஜான்சி, மற்றும் மொராதாபாத் மாநகராட்சிகளை கைப்பற்றியது. பகுஜன்சமாஜ் கட்சி, அலிகார்க் மற்றும் மீரட் மாநகராட்சிகளை கைப்பற்றியது.
 

 

                    நகராட்சி:

                   பிஜேபி-66
                   சமாஜ்வாடி-28
                   பகுஜன் சமாஜ்-40
                   காங்கிரஸ்-02
                   சுயேச்சை-04

 

 

                  நகர பஞ்சாயத்து

                    பிஜேபி-278
                    சமாஜ்வாடி-53
                    பகுஜன் சமாஜ்-85
                    காங்கிரஸ்-16
                    சுயேச்சை-94

மதுரா மாநகராட்சியில் 56வது வார்டில் வாக்க எண்ணிக்கையின் போது, பா.ஜ. மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் 874 வாக்குகளுடன் சம நிலையில் இருந்தது. இதனையடுத்து வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டார். இதில் பா.ஜ.,வுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அந்த வார்டில் பா.ஜ.,வின் மீரா அகர்வால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தொகுதியான அமேதி நகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது.

Leave a Reply