உத்தரப்பிரதேசம் மாநிலம் நூர்பூர் தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ. லோகேந்திர சிங். தனது காரில் சென்று கொண்டிருந்த போது, சிதாபூர் அருகே சாலையின் எதிரேவந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்தவிபத்தில் லோகேந்திர சிங் அவருடன் பாதுகாப்புபணியில் இருந்த இரண்டு போலீசார் மற்றும் கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.