தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதால் ஊழல்செய்து சொத்துக்களைக் குவிக்க வேண்டிய எண்ணமே இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தீனதயாள் உபாத்யாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசும்போது, ஊழலுக்கு எதிரான எனதுபோரில் சமரசம் இல்லை. என் உறவினர்கள் யாரும் ஊழல்புகாரில் பிடிபட மாட்டார்கள். ஏனென்றால் எனக்கு உறவினர்கள் இல்லை. நான் அவர்கள் நலனுக்காக ஊழல்செய்து சொத்துசேர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.” .

ஜனநாயகம் என்பது தேர்தலுக்கு அப்பாலும் இருக்கவேண்டும் ,மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதே ஜனநாயகம். வரும் 2018க்குள் அனைவருக்கும் மின்சாரம்கிடைக்க வழிவகை செய்யப்படும். இந்ததிட்டத்திற்கு ரூ.16 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். புதியதிட்டத்தில் ஏழைமக்கள் ரூ.500 செலுத்தி மின்சாரம் பெறலாம். இதனை 10 மாத தவணையாகவும் செலுத்தலாம்.

Leave a Reply