உ.பி.,யில், நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றும் ஊழல் இன்ஜினியர்களை, கட்டாய ஓய்வில் அனுப்ப, மாநில அரசு முடிவுசெய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நீர்ப்பாசன துறையில்,ஊழல் அதிகரித்துள்ளதாக, தொடர்குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுக்க, முதல்வர் யோகி ஆதித்ய நாத் முடிவுசெய்துள்ளார்.

இதுகுறித்து, மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர், தர்மபால்சிங் கூறியதாவது: ஊழல் இல்லாத, வெளிப்படையான நிர்வாகம் நடத்துவது என, முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில மக்களுக்கு உறுதிஅளித்துள்ளார். அவரது உத்தரவை, நீர்ப் பாசனத்துறை நிறைவேற்றி வருகிறது.இதன்படி, இத்துறையில் பணியாற்றும், 50 வயதுக்கு மேற்பட்ட இன்ஜினியர்கள், தங்கள் பணிக் காலத்தில், ஊழல் அல்லது ஒழுங்கின்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா என, ஆய்வு செய்யப்படும்.

இந்த ஆய்வில், ஊழல் மற்றும் ஒழுங்கின்மை நடவடிக்கைகளில் ஈடுபட்ட இன்ஜினியர்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அந்த அறிக்கையில் இடம்பெறும் அனைத்து இன்ஜினியர்களுக்கும், கட்டாய ஓய்வு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply