திப்புஜெயந்திக்கு எதிர்ப்புதெரிவித்து கர்நாடகாவில் பல பகுதிகளில் பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன.

கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா திப்புஜெயந்தியாக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதற்கு பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காகவே காங்கிரஸூம், மதச்சார்பற்ற ஜனதா தளமும் திப்பு ஜெயந்திரை கொண்டாடுவதாக புகார்எழுந்துள்ளது.

திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்புதெரிவித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. எனினும் பலத்த பாதுகாப்புடன் திப்புஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கடும்சர்ச்சை எழுந்த நிலையில் முதல்வர் குமாரசாமி இந்த விழாவில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டார்.

திப்பு ஜெயந்தியையொட்டி கர்நாடகாவில் 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடகுமாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மடிகேரியில் போராட்டக்குழுவினர் ஊர்வலமாக புறப்பட்டுச்சென்று திப்பு ஜெயந்திக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இதுபோலவே மைசூரு உள்ளிட்ட இடங்களிலும் திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.

இதுகுறித்து பாஜக செயலாளர் சஜ்ஜல் கிருஷ்ணா கூறுகையில், திப்பு ஜெயந்திக்காக பொதுமக்களின் பணத்தை வீணடிக்கிறது. அவர் ஒன்றும் வீரர் அல்ல, பல ஹிந்துக்களை கொன்றதுடன், ஹிந்துகோவில்களை சேதப்படுத்தியுள்ளார். இதுபோன்றவரை எதற்காக புகழ வேண்டும். இது ஓட்டுவங்கி அரசியல்மட்டுமே. குடகு பகுதியில் கூட இதை எதிர்க்கிறார்கள் என்றார். 

 

பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா

 

எங்கள் கட்சியினரின் யாருடைய உடலிலும் திப்புவின் ரத்தம் ஓடவில்லை. பாரதமாதா, சுதந்திர போராட்டக் காரர்களின் ரத்தம் தான் ஓடுகிறது. இந்த திப்பு ஜெயந்தி விழாவை மாநில அரசு எதற்காக இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது என்பது தெரியவில்லை. திப்புஜெயந்தி விழாவை கொண்டாட தொடங்கியதில் இருந்து இந்துமத அமைப்புகளின் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். திப்புஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது, குடகில் குட்டப்பா என்பவர் மரணம் அடைந்தார்.

அப்போது அவரது வீட்டுக்கு குமாரசாமி நேரில்சென்று ஆறுதல் கூறினார். தான் முதல்-மந்திரியானால் திப்புஜெயந்தி விழாவை நடத்த அனுமதிக்க மாட்டேன் என கூறினார்.

ஆனால் இப்போது குமாரசாமி திடீரென முதல்மந்திரி ஆகி இருக்கிறார். கர்நாடகத்தில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் இப்போது இந்த அரசு திப்புஜெயந்தி விழாவை நடத்தி, இந்து, முஸ்லிம் மக்களிடையே அமைதியை குலைக்கிறது. மக்கள் இறந்தால், காங்கிரசாருக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியது:
 

Leave a Reply