நான் சொர்ண நாதன் என்னுடைய id. 152263- 2015- 0274. நான் கடலூர் மாவட்டம் திட்டக் குடி பகுதியை சேர்ந்தவன். பள்ளியில் படிக்கும் காலம் முதல் தங்களுடைய ரசிகனாக இருந்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய கடைசியாகவந்த சர்க்கார் படத்தை 7 முறை பார்த்து ரசித்தவன் நான். நேற்று வரை தங்களுடைய ரசிகனாக வாழ்ந்து கொண்டிருப்பவன். இன்று முதல் உங்களை விட்டு விலகும் எண்ணத்தில் இருக்கிறேன். நான்மட்டுமன்றி எங்கள் பகுதியில் உள்ள சுமார் 170 ற்கு மேற்பட்ட உங்கள் ரசிகர்கள் ரசிகர் மன்றத்தில் இருந்தும் உங்கள் ஆதரவு நிலையில் இருந்தும் விலகுவதற்கு தயாராக இருக்கிறோம். உங்கள் மீது உயிராக இருந்த நாங்கள் இந்தமுடிவை எடுப்பதற்கு என்ன காரணம்?

அதற்கு காரணம் சினிமா துறையில் முழு ஈடுபாடு இருப்பதுவரை நாங்கள் உங்களுடைய ரசிகர்களாக இருந்தோம். ஆனால் நீங்கள் சினிமா துறையை பயன்படுத்தி எங்களுடைய ஆதரவைப் பயன்படுத்தி, எங்களுடைய உழைப்பை பயன் படுத்தி மறைமுகமாக நீங்கள் பின்பற்றும் அந்நிய ஆபிரகாமிய மதத்தை தமிழர்கள் மீது மிகத் தந்திரமாக திணிப்பதை நாங்கள் தற்போது உணர் கிறோம்.

தீபாவளியன்று வெளியாக இருக்கும் பிகில் படத்தின்மீது மிகுந்த ஆவலோடு இருந்த எங்களை ஒரு காவிச் வேட்டி கருப்புசட்டை அதோடு ஒரு சிலுவை மாலையை அதிக விலை கொடுத்து வாங்கி அணிவதற்காக உங்கள் சார்பாக தூண்டுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு ரசிகரிடமும் இருக்கின்ற ஒவ்வொரு பைசாவையும் உறிஞ்சி எடுப்பதற்கு நீங்கள் முயலுவதுபோல தென்படுகிறது. எங்கள் பணத்தை செலவுசெய்து அந்நிய அடிமை சின்னமான சிலுவை மாலையைப் வாங்கி அணிய வேண்டுமாம். மட்டுமன்றி நீங்கள் திரைப்படத்தில்கூட அந்த சிலுவையைப் அதிகமாக பயன்படுத்தி நடிப்பது மட்டுமன்றி எங்களுடைய ஹிந்து மதத்தை மிகத் தரக்குறைவாக இழிவுபடுத்தி பேசுவது பற்றி தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

உங்களது திரைப்படங்களை வெற்றி ஆக்குவது எங்களை போன்ற ரசிகர்கள் பங்கு அளவிட முடியாதது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

ஒவ்வொரு விஜய் ரசிகனும் உங்களுக்காக தங்கள் சொந்த பணத்திலிருந்து செலவு செய்து உங்களுடைய மார்க்கெட்டை உயர்த்தி காண்பிக்கிறோம். நீங்கள் வளம்பெற நாங்கள் அல்லும் பகலும் உழைக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட எங்கள் மனங்களை புண்படுத்தும் வகையில் நீங்கள் எங்கள் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை வைத்தும் வசனங்களை வைத்தும் திரைப்படங்களில் நடிக்கிறீர்கள். அதற்கு முத்தாய்ப்பாக தீபாவளி அன்று வெளிவர இருக்கும் பிகில் படத்தில் நீங்கள் பயன் படுத்தும் அந்நிய மதத்தை எங்கள் மீது திணிப்பது போல காட்சிகளை திணித்து இருக்கிறீர்கள் என்பது தென்படுகிறது. உங்களுக்கு வேண்டுமானால் கழுத்தில் சிலுவையைப் தொங்க விட்டு சுமந்துகொண்டு நடக்கலாம், நடிக்கலாம். ஆனால் உங்களுடைய நடிப்பை பார்த்து உங்களுடைய ரசிகர்களாக நாங்கள் அதை சுமக்கவேண்டிய தேவையில்லை.

எதற்காக சுமந்து கொண்டு திரிய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

அந்த மதத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதை ரசிகர்கள் ஆகிய எங்கள்மீது திணிக்கப் வேண்டியதின் காரணம் என்ன? அப்படியே ஒருவேளை நாங்கள் சுமந்து கொண்டு திரிவதால் எங்களுடைய கஷ்டங்கள், கவலைகள், நோய்கள், நொடிகள், பிரச்சனைகள், என்று அனைத்தும் தீர்ந்து விடுமா?

அப்படி அது தீர்ந்து விடும் என்று சொன்னால் இந்தியாவிலுள்ள 80% கிறிஸ்தவர்களை கொண்ட நாகலாந்து மிசோரம் மாநிலங்கள் ஏன் தற்போதும் பின் தங்கிய நிலையில் அந்த மாநிலங்களில் சமாதானம் இல்லாமல், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளினால் ஒழுகி, வறுமை, நோய், பொருட்களின் தட்டுப்பாடு, நல்ல வசதிகள் இன்மை ஆகியவைகளால் அந்தமாநிலங்களில் திக்குமுக்காடி கொண்டு வருகிறது?

இது நிர்வாக பிரச்சனை என்று காரணம் சொன்னால், பின் எதற்காக இந்த சிலுவையை நாங்கள் சுமக்க வேண்டும்?

தமிழர்களுக்கும் சிலுவைக்கும் என்னதொடர்பு என்பதை நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.

இல்லையேல் எங்கள் பகுதி ரசிகர்மன்ற ரசிகர்கள் மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தில் உள்ள அனைத்து ரசிகர்களும் ( 90% ரசிகர்களும் ஹிந்துக்கள்) விலகி உங்களுடைய மிகத்தந்திரமான மதமாற்ற முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்பதை கூறிக் கொள்கிறோம். எங்களது உழைப்பில் உங்களது மதத்தை எங்கள் மீது திணிக்காதீர்கள்.

நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதீர்கள் என்ற அடிப்படையில் உங்கள் ரசிகர்களை பற்றி விசாரிக்காமல், உங்கள் மீது என்ன தவறு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல் படுங்கள்.

அந்நிய ஆபிரகாமிய மதத்தை உங்கள் ரசிகர்களாகிய எங்களின் மீது திணிக்க முற்படாதீர்கள். அப்படிதிணிக்க முற்படுவீர்கள் என்றால் இதுவே உங்களின் தீயசின்னத்திற்கு ஒரு சாவு மணியாக இருக்கட்டும்.

இப்படிக்கு உங்கள் அதிதீவிர ரசிகனாக இருந்த

சொர்ண நாதன்.

Comments are closed.