எங்கள் யாத்திரையைகண்டு, ஸ்டாலின் நடுக்கத்தோடு உள்ளார்’ என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.

அவரதுபேட்டி: தமிழக பா.ஜ., சார்பில், ‘வெற்றிவேல் யாத்திரை’ வரும், 6ம் தேதி காலை, 10:00 மணிக்கு துவங்கஉள்ளது. இந்த யாத்திரை, அறுபடை வீடுகளுக்கும்செல்லும். தமிழகம் முழுதும் செல்ல உள்ளது. திருச்செந்துாரில் டிசம்பர், 6ல் நிறைவடையும். ஒரு மாத நிகழ்ச்சியில், கட்சியின் தேசியநிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், பிறமாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

நிறைவு நிகழ்ச்சியில், தேசிய தலைவர் நட்டா பங்கேற்க, அழைப்பு விடுத்துள்ளோம்; அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். கூட்டணிகட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். எங்கள் யாத்திரையை கண்டு, ஸ்டாலின் நடுக்கத்தோடு உள்ளார். யாத்திரையை எதிர்ப்போர், கலவரம் உண்டாக்க திட்டமிட்டுள்ளனர். இது குறித்து, தமிழக காவல் துறை விசாரித்து, நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பா.ஜ., என்றைக்கும் பிரச்னை ஏற்படுத்தியது இல்லை. பா.ஜ., தொண்டர்கள் ஒழுக்கத்திற்கு கட்டுப் பட்டவர்கள். ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்புகிறேன். அவர் அரசியலுக்குவந்தால், தமிழக பா.ஜ., வரவேற்கும். யாத்திரையின்போது லட்சக்கணக்கானோர் பா.ஜ.,வில் இணைய உள்ளனர். இவ்வாறு, முருகன் கூறினார்.

Comments are closed.