பா.ஜ.க., தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், எதிர்க் கட்சிகள் பாரதீய ஜனதா கட்சிக்கு சவால்விடுக்க இயலாதவை. எதிர்க் கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது, பிரச்சனைகளுக்காக கிடையாது என்று கூறியுள்ளார். 

 

ஆட்சியி லிருக்கும் போது தோல்வியை தழுவியவர்கள், எதிர்க் கட்சிகளாகவும் தோல்வியாளர்கள்தான் என விமர்சனம் செய்துள்ளார். 

 

“கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் போட்டியிட தயாராக உள்ளோம், பொய்களுடன் போட்டியிட எங்களுக்கு தெரியாது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார். பா.ஜனதா தேசியநிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக செய்தியா ளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்,  எதிர்க் கட்சிகளால் அமைக்கப்படும் மகா கூட்டணியையும் பிரதமர் மோடி நிராகரித்து விட்டார் என கூறியுள்ளார். “எதிர் கட்சிகளின் தலைவர் தெரியவில்லை, அவர்களுடைய நோக்கம் ஊழல்,” என கூறியுள்ளார் என ரவி சங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply