ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.விற்கு ஆதரவளிக்காத கட்சி உறுப்பினர்கள் சிலரின் ஓட்டுகள் ராம் நாத்திற்கு ஆதரவாக விழுந்திருப்பது. தெரியவந்துள்ளது. பெரும்பாலும் காங்., ஓட்டுகள் ராமநாத்திற்கு விழுந்திருப்பது அக்கட்சிக்கு புதிய தலை வலியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பாஜக., சார்பில் போட்டியிட்ட ராம்நாத்கோவிந்த் தேர்தெடுக்கப்பட்டார். இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கையில் அவர் பதிவான வாக்குகளில் 65.65 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

மாநில ரீதியிலான வாக்கு எண்ணிக்கை முடிவுகளை பார்க்கும்போது பல மாநிலங்களில் பா.ஜ., ஆதரவு இல்லாத பலர் ராம்நாத்கோவிந்திற்கு வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது.

குஜராத் மாநிலத்தை பொருத்தவரை மொத்தம் 121 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். ஆனால் ராம் நாத்திற்கு 132 வாக்குகள் விழுந்துள்ளது.இதன் மூலம் 11 காங்., எம்.எல்.ஏ.க்கள் ராம்நாத்திற்கு வாக்களித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியை சேர்ந்த 2 அல்லது 4 எம்.பி.க்கள் ராம்நாத்திற்கு வாக்களித்திருக்கலாம் எனவும்,

மேற்கு வங்கத்தை பொருத்தவரை பா.ஜ.,விற்கு மொத்தம் 6 வாக்குகள் மட்டுமே இருந்தது. ஆனால் ராம்நாத் 11 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் பாக்கியுள்ள 5 வாக்குகள் திரிணாமுல் காங்., கட்சியினரோ, அல்லது இடதுசாரியினரோ வாக்களித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

திரிபுராவில் பா.ஜ.,விற்கு ஒரு வாக்கு கூட விழாது என எதிர்பார்த்த நிலையில் 7 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மீராகுமார் மொத்தம் 77 வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம், காங்., அல்லது இடது சாரியை சேர்ந்த 10 பேர் ராம்நாத்திற்கு வாக்களித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கோவாவில் மொத்தம் ராம்நாத்திற்கு 22 வாக்குகள் விழும் என எதிர்பார்த்த நிலையில் 25 வாக்குகள் விழுந்துள்ளது. அதிகமாக விழுந்த 3 வாக்குகளில் 2வாக்குகள் காங்., கட்சியினர் ஓட்டு போட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உ.பி.யில் எதிர்பார்த்த வாக்கை விட 8 வாக்குகள் ராம்நாத் அதிகமாக பெற்றுள்ளார். சமாஜ்வாதியை சேர்ந்த சிலர் ராம்நாத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஓட்டுகள் மாற்றி விழுந்தது குறித்து மீராகுமாரிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பிய போது: ‛‛ யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம், அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை'' என கூறினார்.

Leave a Reply