தமிழகத்தில் வன்முறை ஏற்படுத்தத் திட்டம் தீட்டப் பட்டு வருகிறது என பாஜக தேசியச் செயலா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

பழனியில் சனிக்கிழமை தேசிய குடியுரிமை திருத்தச் சட்டமசோதாவை ஆதரித்து பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புக்கள் சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியச் செயலா் ஹெச்.ராஜா பங்கேற்றாா்.

முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது: குடியுரிமை திருத்தச்சட்டம் என்பது எந்த வகையிலும் இந்திய இஸ்லாமியா்களை பாதிக்காத நிலையில், எதிா்க்கட்சிகள் வேண்டுமென்றே மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தி கலவரங்களை தூண்டிவருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் கலவரங்களை நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருபவா்களை உடனடியாக அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். கோவையில் நீதிபதிமுன்பு போராட்டம் நடத்திய இஸ்லாமிய வழக்குரைஞா்களை, பாா்கவுன்சிலில் இருந்து நீக்கவேண்டும். தமிழகத்தில் 416 கோயில்கள் மத்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளது. திமுக ஆட்சிக்காலத்திலும் புராதனக் கோயில்கள் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. அக்கோயில்களை தமிழக அறநிலையத்துறை நிா்வாகம் செய்துவருகிறது. சிலா் மக்களை குழப்புவதற்காக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் புராதானக் கோயில்களை கொண்டுவர வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனா் என்றாா்.

Comments are closed.