இன்று சமூக வலைத்தளங்களில் இரண்டு வீடியோக்களை உலவ விட்டுள்ளனர். அதில் ஒன்று ஜெ. தாளாத கால்வலியால் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு; ஒரு கட்டத்தில் செக்யூரிட்டியின் கையைப் பற்றிக் கொண்டு குழந்தையைப் போல நடக்கிறார். அவர் உடல்நிலை சரியின்றி துன்பப்படும் காட்சி அது.

இன்னொரு வீடியோவில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலைத் தொட்டு வணங்குகிறார்; அதாவது எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்பதுதான் இந்த வீடியோ மூலம் இவர்கள் தரும் செய்தி.

அரசியல் என்றாலே சூழ்ச்சிதானே. சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் செய்யாத சூழ்ச்சிகளா.

ஜெ. முதல்வராக இருந்த காலத்தில் அவருடன் தனக்கிருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி சசிகலா செய்தவை கடவுளுக்கே வெளிச்சம். ஜெ. வின் பெயர் கெட்டதற்கும், பல ஊழல் வழக்குகளில் ஜெ. சிக்கி கோர்ட்டுக்கு அலைந்ததற்கும் சசியும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் முக்கிய காரணம்.

ஜெ.வுடனான நட்பு ஏற்பட்ட பின் சசி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் எத்தனை மடங்கு உயர்ந்தன என்பதும், இவற்றில் ஜெ.வுக்குத் தெரிந்து நடந்தது எவ்வளவு, தெரியாமல் நடந்தது எவ்வளவு என்பது பரம ரகசியம்.

சரி. ஜெ.வுக்கு சசிகலா நம்பிக்கை துரோகம் செய்யவில்லையா..?? வெளிப்படையாக தெரிந்த சில:

1. ஜெ. சுயநினைவுடன் இருந்த வரை ஜெ.வின் போயஸ் கார்டன் வீட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட சசிகலாவின் குடும்பத்தினர்கள் ஜெ. அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்ட உடனேயே எப்படி குடும்பத்தோடு உள்ளே நுழைந்தார்கள்..??

2. ஒன்றல்ல இரண்டல்ல 72 நாட்கள்… ஜெ.வுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதே தெரியாமல் பார்த்துக் கொண்டது முதல்வர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இல்லையா..??

3. முதல்வர் குணமாகி விட்டார்; இட்லி சாப்பிடுகிறார்; விரைவில் வீடு திரும்புவார்; அவர் எப்போது திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார் என்று அறிக்கை மக்களை வடிகட்டிய முட்டாள் ஆக்கியது.

4. ஜெ. வின் மரணத்திற்குப் பின் சசியின் குடும்பத்தினர் அனைவரும் சுற்றி அமர்ந்து கொண்டு அமைச்சர்களைக் கூட நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டது விந்தையிலும் விந்தை.

5. அனைத்திற்கும் மேலாக தேமே என்று நடத்தப்பட்ட இறுதிச் சடங்கு. ஜெ. ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை உடைய ஹிந்து பிராமணப் பெண். சற்றும் தயக்கமின்றி சட்டசபையிலேயே ஆமாம் நான் பாப்பாத்திதான் என்று வெளிப்படையாகவே சொன்னவர்.

6. ஆனால் ஜெ.வுக்கு கடனே என்று நடத்தப்பட்ட இறுதிச் சடங்குகளைப் பார்த்து அவரது அரசியல் எதிரிகள் கூட கண்ணீர் வடித்தனர். ஜெ. வுக்கு சாவிலும் நிம்மதி இல்லை. சாவுக்குப் பிறகும் இல்லை.

7. இப்போது சசியின் குடும்பம் தங்களை காப்பாற்றிக் கொள்ள பகீரத ப்ரயத்தனம் செய்து வருகிறது. ஆனால் அவை பலனளிக்காது. காரணம் தர்மம். தர்மத்தை யார் காப்பாற்றுகிறார்களோ; அவர்களை அந்த தர்மம் காப்பாற்றும். #தர்மோ #ரக்ஷதி #ரக்ஷித:

ஜெ.வின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்த ஓ.பி.எஸ்.ஸை தன் பேராசையால் ராஜினாமா செய்ய வைத்து; அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட அத்தனை அரசியல் குழப்பங்களுக்கும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம்.

இப்போது காலம் திரும்புகிறது. வள்ளுவன் அழகாக சொன்னான் – "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் அவர்தம் கருமமே கட்டளைக்கல்". எதை விதைத்தார்களோ அதைத்தானே அறுவடை செய்ய வேண்டும்..??

Leave a Reply