பெட்ரோலில் கலப்பதற்கு எத்தனால் வாங்கு வதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்தார். வாகன பெருக்கத்தால் பெட்ரோல், டீசல்பயன்பாடு அதிகரித்துவருகிறது. ஆனால் இதற்கு தேவையான கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது. இதற்கேற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கின்றன. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும்வகையில், எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனைசெய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரவை 2016 அக்டோபரில் ஒப்புதல் அளித்தது. எத்தனால் கலப்பதால் கரும்பு விவசாயிகளுக்கும் பலன்கிடைக்கும். எத்தனால் வாங்கும் நடைமுறையை மத்திய அரசு எளிமைப்படுத்த இருக்கிறது. இது குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், லக்னோவில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:  எத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

கரும்பில் இருந்து எடுக்கப்படும் எத்தனாலை பெட்ரோலில் கலப்பதால், கச்சா எண்ணெய் இறக்குமதிதேவை குறையும். அதோடு, கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலைகிடைக்கும். பெட்ரோலில் 10 சதவீதம்வரை எத்தனால் கலப்பது அனுமதிக்கப் பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில்  எத்தனால் பயன் பாடுகள் அதிகரிக்கும். கரும்பு விவசாயிகள் பெரியளவில் பலன்பெறுவார்கள். கச்சா எண்ணெயை போலவே எத்தனால் பெட்ரோல், டீசல் தயாரிப்புக்கான மூலப்பொருளாக கருதப்படும் என்றார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், எத்தனால் உற்பத்தி திட்டத்துக்காக 50 ஏக்கர்நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில்தொடங்கும் என பிரதான் தெரிவித்தார்.

Leave a Reply