எங்கேயோ, ஓலைக் கொட்டகையில ஏழை அப்பத்தா சுருக்குப் பையில் வைத்திருந்தது கருப்புப் பணம் அல்ல,அரசு வேலை பார்த்து ஆயிரங்களில் தொடங்கி லட்சம் கோடி வரை விதவிதமாக லஞ்சம் வாங்கி வீட்டில் பூட்டி வைத்திருந்தது கருப்புப் பணம்- இதை ஒழிக்க வேண்டாமா? –

அடுத்ததாக அரசியல்வாதிகளில் வார்டு மெம்பர் முதல் முதலமைச்சர் வரை -ஆயிரம், லட்சம் கோடிகளில் ஊழல் செய்து கொடோன்களில் ஒளித்து வைத்திருந்தது கருப்புப் பணம்- இதை ஒழிக்க வேண்டாமா?

70 வருடங்களாக ஊழல் பல்வேறு மட்டங்களில் நடந்து வந்திருந்தாலும் _ UPA – அரசின் அந்த பத்து வருட ஆட்சியின் அவலங்கள் நாடறியும்.எல்லாமே, லட்சம் கோடிகளில் தான் ஊழல்கள் நடந்தன.
கருப்புப் பணமும், கள்ளப் பணமும் தலைவிரித்தாடின.

நமது, பணப்புழக்கத்தில் 30% அளவிற்கு பாக்கிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட , பாக்.கள்ள நோட்டுகள் கலந்திருந்தது யாருக்காவது தெரியுமா? அது கிட்டத்தட்ட 4 லட்சம் கோடிகள் – அவற்றை ஒழிக்க வேண்டாமா?

அது மட்டுமில்லாமல் இங்கே இருக்கும் கள்ள நோட்டுக் கும்பல்கள் வேறு தன் பங்கிற்கு சில ஆயிரம் கோடிகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டிருந்தது – அதை ஒழிக்க வேண்டாமா?

அதற்காகத் தானே நாடே ஒன்று சேர்ந்து மோடியை மன்னராக்கினோம் – அவர் இவர்களின் மீது நடவடிக்கை எடுத்தால் கத்துவது, கதறவது _ திசை திருப்புவது, போராட்டம் செய்வது – இவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா? அந்த நாள் தான் இன்று –

இன்று உங்கள் பகுதிகளில் கருப்பு தினம் அனுஷ்டிப்பவர்களைப் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இவர்கள் தான், கருப்புப் பணத்தை வளர்த்த, அதற்கு ஆதரவான கேடுகெட்ட அரசியல்வாதிகள் –

இவர்கள் சேர்த்து வைத்த கருப்புப் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த பொழுது – ஒலைக் கொட்டகை, ஏழை அப்பத்தா என்று ஏழைகள் மீது பழியைத் தூக்கிப் போட்டவர்கள் – எந்த ஏழையடா கோடிகளை கண்ணால் பார்த்திருக்கிறான்?

Leave a Reply