பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச் சரவையில் ஸ்மிருதி இரானி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க் கிழமை மாற்றியமைத்தபோது, அவரிடம் இருந்து மனிதவள மேம்பாட்டுத்துறை பறிக்கப்பட்டு, அதற்குப்பதிலாக ஜவுளித் துறை அளிக்கப்பட்டது. கேபினட் அமைச்சராக அந்தஸ்து உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜாவடேகரிடம் மனிதவள மேம்பாட்டுத்துறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தில்லியில் ஜவுளித்துறை அமைச்சகத்துக்குச் சென்று தனது பொறுப்பை ஸ்மிருதி இரானி புதன்கிழமை ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்மிருதி இரானியிடம், அமைச்சரவையில் அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டது கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "எனது இலாகாவை மாற்றுவது தொடர்பானமுடிவை தனிப்பட்ட நபர்கள் எடுக்கவில்லை; கட்சிதான் அந்தமுடிவை எடுத்துள்ளது' .

இதேபோல், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் ஸ்மிருதி இரானி அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இலாகா மாற்றப்பட்டதா? எனவும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஹிந்தி திரைப்படப் பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, "எதையாவது மக்கள் தெரிவிக்கவேண்டும்; ஏனெனில், அதுதான் அவர்களின் பணியாகும்' என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை கண்டு நான் மகிழ்ச்சி யடைகிறேன். குறிப்பாக, எனது துறைக்குதான் சிறப்புத்தொகை (ஜவுளித் துறைக்கு ரூ.6,000 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு மத்திய அமைச்ச ரவையால் வகுக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் திறன் எனக்குஇருக்கிறது என்று கட்சியும், பிரதமரும் நம்புகின்றனர் என்பதையே இதுகாட்டுகிறது.

விரைவில் புதிய ஜவுளிக்கொள்கை: பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய ஜவுளிக்கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் ஸ்மிருதி இரானி.

Leave a Reply