காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் வதந்தியை பரப்புகின்றனர்.
சர்வதேச அளவிலும், வதந்தியை பரப்பு கின்றனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு தைரியமிருந்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மீண்டும் அமல் படுத்துவோம் என, தேர்தல் வாக்குறுதி அளிக்கதயாரா?

என் மீது, என்ன விதமான அவதுாறையும் பரப்புங்கள். அந்த அவதுாறு, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அவதுாறாககூட இருக்கட்டும். எனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அதேநேரத்தில், நம் நாட்டின் முதுகில் குத்துவதை நிறுத்துங்கள்.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு, நாட்டின் நலன் கருதியே ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் பரப்பும் வதந்திகளை, மக்கள் முறியடிக்க வேண்டும்.

சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, சமீபத்தில் சந்தித்த போது, தங்கல் என்ற ஹிந்தி படத்தை பார்த்ததாகவும், பெண் குழந்தைகளால் எவ்வளவு முக்கியமான செயல்களை செய்யமுடியும் என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார். பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்தை, ஹரியானா மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், மத்திய அரசு செயல்படுத்தியிருக்க முடியாது. ஹரியானா மாநிலத்தில், பெண்களுக்கு மதிப்பும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது.

ஹரியானா மாநில தேர்தல் பிரச்சாரத்தில்  பிரதமர் மோடி பேசியது.

Comments are closed.