எனது தகுதியும் திறமையும் எனக்குதெரியும் என்பதால் பிரதமர் பதவிக்கு நான் ஆசைப்பட வில்லை என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.

மும்பையில் ஊடக நிறுவன கலந்துரை யாடல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தரைவழி போக்குவரத்துறை அமைச்சர் கட்கரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவரிடம், பிரதமர் மோடி தனிச்சையாக செயல்படுவதாக கூறப்படுவதுபற்றி கேள்வி கேட்கப் பட்டது.

அதற்கு அவர் பதிலளித்ததாவது:

‘‘வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைபிடிக்கும். சில கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தி இருந்தாலும் விரைவில் சரிசெய்யப்படும். பிரதமர் மோடி மிகவும் கடுமையானவர் என்ற பிம்பம் பொதுவாக உள்ளது. கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் வளர்ந்தவர் என்பதால், மற்றவர்களிடம் கடுமை காட்டுவதாக சொல்ல படுகிறது, அதற்காக மற்றவர்கள் சொல்வதை அவர் கேட்பதில்லை என அர்த்தம் கொள்ளக்கூடாது’’ எனக்கூறினார்.

பின்னர், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பாஜக உங்களை முன்னிறுத்துமா என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில் ‘‘மத்திய அமைச்சர்பதவி வகிப்பதே எனக்கு நிறைவாக உள்ளது. எனதுதகுதியும், திறமையும் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் பிரதமர் பதவிக்கு நான் ஆசைப் படவில்லை’’ எனக்கூறினார்.

Leave a Reply